“ஹர்திக்கை நீக்க ஃபிட்னஸ் காரணமில்லை”.. குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி.. மும்பை அணி கொடுத்த விளக்கம்
மும்பை: ஃபிட்னஸ் காரணமாக ஹர்திக் பாண்ட்யாவை அணியில் இருந்து வெளியேற்றவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசன் தொடர் சிறப்பாக முடிவடைந்த நிலையில் அனைவரின் பார்வையும் 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் மீது திரும்பியுள்ளது
இந்த முறை மெகா ஏலம் நடைபெறுவதால் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் இருந்து பல முக்கிய வீரர்களை வெளியேற்றிவிட்டது.

மும்பை அணியின் தேர்வு
அந்தவகையில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, தங்களது அதிரடி வீரர் ஹர்திக் பாண்ட்யாவை இந்த முறை வெளியேற்றியுள்ளது. பல போட்டிகளில் வெற்றியை தேடி கொடுத்த அவரது நீக்கம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் கடந்த 2 வருடங்களாக அவரின் மோசமான ஃபார்ம் தான்.

என்ன காரணம்
முதுகில் ஏற்பட்ட காய பாதிப்பு காரணமாக அவரால் பந்துவீச முடியவில்லை. கடந்த 2 சீசன்களாகவே மும்பை அணிக்காக அவர் பவுலிங் செய்யாமல் தான் இருக்கிறார். எனவே அவரின் ஃபிட்னஸை மனதில் வைத்து தான் அந்த அணி நிர்வாகம் கழட்டிவிட்டுள்ளது. அது சரியான முடிவு தான் என ரசிகர்கள் புரிந்துக்கொண்டனர்.

மும்பை அணி விளக்கம்
இந்நிலையில் ஃபிட்னஸ் காரணமாக பாண்ட்யா வெளியேற்றப்படவில்லை என அந்த அணியின் முக்கிய நிர்வாகி ஜாகீர் கான் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், அணியில் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க வேண்டும் என்பதனால் மிகப் பெரிய விவாதம் எங்களுக்குள் நடைபெற்றது. ஃபிட்னஸ் மட்டும் ஒரு முக்கிய பங்காக அங்கு இருக்கவில்லை. பல்வேறு கோணங்களிலும் அணிக்கு யார் தேவை, யார் தேவையில்லை என்பதை யோசனை செய்யப்பட்ட பின்னர் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வேறு வழியில்லை
மிகக் கனத்த இதயத்துடன் சில வீரர்களை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்படியே ஹர்திக் பாண்ட்யா அணியில் இருந்து வெளியேறியுள்ளார். அதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என ஜாகீர் கான் கூறியுள்ளார். எனினும் மீண்டும் அவரை அணியில் எடுப்பதுகுறித்து அவர் எதுவும் கூறவில்லை.
Recommended Video

அணி தாவும் பாண்ட்யா
ஐபிஎல் மெகா ஏலத்தின் போது சில முக்கிய வீரர்களை மும்பை அணி ஏலத்தில் எடுக்க எதிர்நோக்கியுள்ளது. ஆனாலும் மெகா ஏலத்திற்கு முன்பாகவே அகமதாபாத் அணி பாண்டியாவை தேர்வு செய்ய தயாராக உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications