For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐயா..மைக் ஹஸி ஐயா.. நீங்களா ? கான்வே ஹாட்ரிக் அரைசதம்.. சிஎஸ்கே 208 ரன்கள் குவிப்பு

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர் டிவோன் கான்வே ஹாட்ரிக் அரைசதம் அடித்துள்ளார்.

டெல்லிக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் களமிறங்கிய சிஎஸ்கே அணி டாஸை இழந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சிஎஸ்கே அணியில் ஜடேஜா, பிரிட்டோரியஸ்க்கு பதிலாக சிவம் துபே மற்றும் பிராவோ ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பவுலர்களுக்கு நெருக்கடி

பவுலர்களுக்கு நெருக்கடி

தொடக்க வீரராக களமிறங்கிய கான்வே, ருத்துராஜ் ஜோடி வழக்கம் போல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி , டெல்லி அணி பந்துவீச்சாளர்களை செட்டில் ஆக விடவே இல்லை. எப்போதும் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி தருவார்கள் அல்லவா, இம்முறை கொஞ்சம் மாற்றமாக சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு அவர்களுக்கு நெருக்கடி அளித்தனர்.

கான்வே சிக்சர்

கான்வே சிக்சர்

குறிப்பாக டிவோன் கான்வே அடித்த ஷாட், சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை எதிர்கொண்ட விதம் அப்படியே, நம்ம மைக்கேல் ஹஸியை பார்த்தது போல் இருந்தது. கான்வே 29 பந்துகள் அடித்திருக்கும் போதே அரைசதம் அடித்தார். அப்போதே 4 சிக்சர்களை கான்வே விளாசினார். கான்வே அதிரடியை காட்டியதால் நம்ம ருத்துராஜ் கொஞ்சம் அமைதி காத்தார்.

110 ரன்கள் பார்ட்னர்ஷிப்

110 ரன்கள் பார்ட்னர்ஷிப்

குல்தீப் யாதவின் 8 பந்துகளை எதிர்கொண்ட கான்வே 30 ரன்களை விளாசினார். இதே போன்று வேகப்பந்துவீச்சாளர் நோக்கியா ஓவரில் இறங்கி வந்து சிக்சர் அடித்தார். ருத்துராஜ் 41 ரன்களில் ஆட்டமிழக்க , முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 110 ரன்களை சேர்த்தது. நடப்பு சீசனில் 2வது முறையாக இந்த ஜோடி 100 ரன்களை சேர்த்துள்ளது.

சிஎஸ்கே 208 ரன்கள் இலக்கு

சிஎஸ்கே 208 ரன்கள் இலக்கு

கான்வே 49 பந்துகளில் 87 ரன்கள் அடித்த நிலையில் கலில் அகமது பந்துவீச்சில் ரிஷப் பண்டிடம் பிடிப்பட்டார். சிவம் துபேவும் 19 பந்துகளில் 32 ரன்களை குவித்தார். கேப்டன் தோனியும் எதிர்கொண்ட 2வது பந்திலேயே சிக்சர் விளாசினார். 8 பந்தில் அவர் 21 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 208 ரன்களை எடுத்துள்ளது.

Story first published: Sunday, May 8, 2022, 21:42 [IST]
Other articles published on May 8, 2022
English summary
IPL 2022- Conway stunning innings helps CSK set 209 Runs Target for DC ஐயா..மைக் ஹஸி ஐயா.. நீங்களா ? கான்வே ஹாட்ரிக் அரைசதம்.. சிஎஸ்கே 208 ரன்கள் குவிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+