Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி அணியில் கொரோனா பாதிப்பு.. முக்கிய நபருக்கே உறுதியானது.. ஐபிஎல்-ல் புதிய பூகம்பம்!

டெல்லி அணியில் கொரோனா பாதிப்பு.. முக்கிய நபருக்கே உறுதியானது.. ஐபிஎல்-ல் புதிய பூகம்பம்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாதுகாப்பு ஏற்பாடுகள்

கடந்த சீசனில் ஏற்பட்ட கொரோனா பிரச்சினை இந்தாண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான், மும்பை நகரத்தில் மட்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்தி வருகின்றனர். அதுவும் குறைந்த அளவிலான ரசிகர்களை அனுமதித்து வெற்றிகரமாக நடத்தினர். இந்நிலையில் அதற்கு ஆப்பு வந்துள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மூத்த பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஹோட்டல் அறையில் இருந்த டெல்லி அணி வீரர்களுக்கு வழக்கமான பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் அவருக்கு மட்டும் உறுதியாகியுள்ளது. அறிகுறிகள் இருந்ததா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனினும் அடுத்த 7 நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நாளைய போட்டி

நாளைய போட்டி

ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அடுத்ததாக நாளை ஆர்சிபி அணியுடன் போட்டியுள்ளது. இந்த போட்டியில் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் தனஞ்செயா கௌசிக் வீரர்களை பார்த்துக்கொள்வார் எனத்தெரிகிறது. எனினும் மற்றவர்களுக்கும் கொரோனா உறுதியாகியிருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Recommended Video

IPL 2022:Jos Butler-ன் Sportsmanship! Indian Fans-ன் இதயங்களை Win பண்ணிட்டார் | OneIndia Tamil
எப்படி கொரோனா பரவியது

எப்படி கொரோனா பரவியது

டெல்லி அணியிலும் பாதுகாப்பான பயோ பபுள் ஏற்பாடுகள் இருந்தன. எனினும் அவற்றினை மீறி எப்படி கொரோனா பாதித்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பரிசோதனைகளில் ஏதேனும் கோளாறுகள் நடந்துள்ளனவா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Story first published: Friday, April 15, 2022, 18:20 [IST]
Other articles published on Apr 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+