Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிடுகிடுவென உயர்ந்த கொரோனா பாதிப்பு..முக்கிய வீரர்களுக்கு சிக்கல்..ஐபிஎல்-ல் வெடித்த புதிய பிரச்சினை

மும்பை: ஐபிஎல் தொடரில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Recommended Video

IPL 2022: Delhi Capitals hit by Covid-19 outbreak; squad under isolation | OneIndia Tamil

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகளில் நடைபெற்று வருகிறது.

எனினும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குள் மட்டும் கொரோனா தொற்று நுழைந்தது.

கொரோனா

கொரோனா

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பார்ஹார்ட்டிக்கு கொரோனா உறுதியானதாக 16ம் தேதி தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுக்காக காத்திருந்தனர்.

வீரருக்கு கொரோனா உறுதி

வீரருக்கு கொரோனா உறுதி

இது ஒருபுறம் இருக்க, இன்று காலை திடீரென வீரர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த மிட்செல் மார்ஷுக்கு தான் பாதிப்பு இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து ஒட்டுமொத்த வீரர்களும் குவாரண்டைன் செய்யப்பட்டிருந்தனர்.

எண்ணிக்கை அதிகரிப்பு

எண்ணிக்கை அதிகரிப்பு

இந்நிலையில் தற்போது மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா உறுதியானது.

டெல்லி அணியின் ஆல்-ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் அணி நிர்வாகி ஒருவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கு சிக்கல்

போட்டிக்கு சிக்கல்

இதனையடுத்து பயிற்சி வகுப்புகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் டெல்லி அணிக்கு, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது. வீரர்கள் 7 நாட்கள் வரை குவாரண்டைன் செய்யப்படுவார்கள் என்பதால்,

போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது

Story first published: Monday, April 18, 2022, 21:02 [IST]
Other articles published on Apr 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+