For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே வெற்றி பாதைக்கு திரும்பும்.. பிராவோ அளித்த நம்பிக்கை.. அந்த வீரருடன் ஒப்பிடாதீர் என கோரிக்கை

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ பெற்றுள்ளார்.

இதற்கு முன்பாக அந்த சாதனையை மலிங்கா படைத்திருந்த நிலையில், தற்போது பிராவோ அதனை தகர்த்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு இந்த சீசன் சொதப்பலாக அமைந்துள்ள போதிலும், பிராவோவின் இந்த சாதனை மட்டும் பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.

ஸ்பெஷல் தினம்

ஸ்பெஷல் தினம்

இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் பிராவோ ஒரு நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். எனக்கு தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவும், அன்பும் செலுத்தி வருகிறார்கள். ஆனால் இது எனக்கு ஒரு ஸ்பெசல் தினம் தான்.

15 ஆண்டுகள்

15 ஆண்டுகள்

உலகின் கடினமான கிரிக்கெட் தொடரில் உலகின் சிறந்த நம்பர் 1 டி20 பவுலராக விளங்கிய மலிங்காவின் சாதனையை முறியடித்தது பெருமையாக உணர்கிறேன். இது ஒரு நீண்ட பயணம், சரியாக சொல்லனும் என்றால் 15 ஆண்டுகள். இத்தனை ஆண்டுகளும் புகழ்மிக்க தொடரில் விளையாடியது உள்ளபடியே மகிழ்ச்சி.

மலிங்கா நம்பர் 1

மலிங்கா நம்பர் 1

சிறந்த பந்துவீச்சாளர்கள் மத்தியில் விளையாடியது எனக்கு பெருமையே. ரசிகர்கள் என்னை மலிங்காவுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆனால் அவர் முற்றிலும் வேறு ஒரு தரத்தில் உள்ள சிறந்த பவுலர் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. என்னை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் மலிங்கா தான் விளையாடியதிலேயே சிறந்த வீரர்.

பிராவோ நம்பிக்கை

பிராவோ நம்பிக்கை

அதனால் யாரும் ஒப்பிட வேண்டாம். எஞ்சிய போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன். சென்னை அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் அதற்காக தொடர்ந்து நான் உழைப்பேன். மீண்டும் அனைவருக்கும் என் நன்றியும், அன்புகளும். மீண்டும் சொல்கிறேன் மலிங்கா தான் சிறந்த பவுலர்.

Story first published: Saturday, April 2, 2022, 23:12 [IST]
Other articles published on Apr 2, 2022
English summary
IPL 2022 – CSK All rounder DJ Bravo hearttribute letter to fans after record சிஎஸ்கே வெற்றி பாதைக்கு திரும்பும்.. பிராவோ அளித்த நம்பிக்கை.. அந்த வீரருடன் ஓப்பிடாதீர் என கோரிக்கை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+