Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவுக்கு அடுத்த அடி.. இனி மொயீன் அலியும் இல்லையா?? நிர்வாகம் தரப்பில் அதிர்ச்சி தகவல்!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இக்கட்டான சூழலில் மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நடப்பு தொடரில், முதல் சில போட்டிகளில் தோல்விகளை சந்தித்திருந்த சிஎஸ்கே, தற்போது தான் மீண்டுள்ளது.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

புள்ளிப்பட்டியல் விவரம்

புள்ளிப்பட்டியல் விவரம்

இன்று நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறிவிடும். தீபக் சஹார் இல்லாதது, ருதுராஜ் கெயிக்வாட்டின் ஃபார்ம், பவுலிங் பிரச்சினைகளை சரி செய்து தற்போது தான் நல்ல நிலைமைக்கு வந்துள்ளது.

அதிர்ச்சி செய்தி

அதிர்ச்சி செய்தி

இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. மிடில் ஆர்டரில் தூண் போன்று இருந்த முக்கிய வீரர் மொயீன் அலிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சில போட்டிகளில் விளையாட மாட்டார் எனத்தெரிகிறது. அவரின் ஸ்கேன் ரிப்போர்ட்டிற்காக காத்துள்ள அணி நிர்வாகம், அதனை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எனக்கூறியுள்ளது.

 மாற்று வீரர்

மாற்று வீரர்

கடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியிலேயே மொயீன் அலி விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக மிட்செல் சாண்ட்னர் விளையாடினார். மொயீன் அலி தாமதமாக வந்ததால், இந்த தொடரின் தொக்கத்திலேயே சிரமப்பட்டது. தற்போது மீண்டும் அவரை மிஸ் செய்யவுள்ளது. இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள மொயீன் 87 ரன்களை அடித்துள்ளார்.

Recommended Video

PBKS vs CSK: Ruturaj Gaikwad மோசமான செயலால் பெரும் அடிவாங்கிய CSK | Oneindia Tamil
அடுத்த போட்டி என்ன

அடுத்த போட்டி என்ன

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக பஞ்சாப் கிங் அணியை எதிர்கொள்கிறது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தாண்டு நல்ல ஃபார்மில் இல்லை. எனவே மொயீன் அலி இருந்திருந்தால், பவர் ப்ளேவில் அவர்களின் பவுலிங்கை நன்கு அடித்திருக்கலாம்.

Story first published: Monday, April 25, 2022, 22:46 [IST]
Other articles published on Apr 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+