Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்ணா 2வது லட்டு திண்ண ஆசையா..? சிஎஸ்கே அணியில் மிரட்டும் இந்திய ஆல்ரவுண்டர்.. அசந்து போன தோனி

மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் சிஎஸ்கே அணியில் இந்திய ஆல் ரவுண்டர் அதிரடியாக மிரட்டுகிறார்.

Recommended Video

IPL 2022: Adam Milne to be in CSK's 11 as Chahar's replacement | OneIndia Tamil

சூரத்தில் சிஎஸ்கே அணிக்குள் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் யார் சிறப்பாக விளையாடுகிறாரோ, அவர்களை பிளேயிங் லெவனில் சேர்க்க தோனி திட்டமிட்டு இருந்தார்.

ஏற்கனவே குட்டி ஹர்திக் பாண்டியா என போற்றப்படும் ராஜவர்த்தனே ஹங்கர்கேகர் அதிரடியாக விளையாடும் நிலையில், அவரையே மிஞ்சிய ஒரு இந்திய ஆல் ரவுண்டர் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

இந்திய அணியில் ஆல் ரவுண்டராக விராட் கோலியால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் சிவம் துபே. ஆர்சிபி அணியில் முதலில் இருந்தார், பின்னர் ஃபார்ம் குன்றியதால் ராஜஸ்தான் அணிக்கு விலை போனார். அங்கு அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சிவம் துபேவை 4 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது சிஎஸ்கே.

சிவம் துபே

சிவம் துபே

சிஎஸ்கேவின் இந்த முடிவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். இவருக்கு செலவு செய்த 4 கோடி ரூபாயை, டுபிளஸிஸ்க்கு தந்து இருக்கலாம் என கடுமையாக சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் அந்த விமர்சனத்தை எல்லாம் தற்போது அடித்து உடைத்துள்ளார் சிவம் துபே. தோனி பந்தயம் கட்டிய குதிரை, தோற்காது என்று சொல்வதை போல் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார் துபே.

இமாலய சிக்சர்

இமாலய சிக்சர்

யுவராஜ் சிங் தனது இளமை காலத்தில் எப்படி செயல்பட்டாரோ அதே போல் மனுஷன் பேட்டிங்கில் அசத்திவிட்டார். வேகப்பந்து, சுழற்பந்துவீச்சு என சிக்சர்களை பறக்கவிட, எதிர் திசையில் நின்ற தோனியே அவரிடம் சென்று பாராட்டினார். சிவம் துபேவின் இந்த அதிரடி ஆட்டத்தை கண்ட சிஎஸ்கே பயிற்சி குழு துள்ளி குதித்து வருகின்றது.

சிஎஸ்கே பலம் அதிகரிப்பு

ஏற்கனவே ஹங்கர்கேகரும் மிரட்டி வரும் நிலையில், தற்போது அவரையே சிவம் துபே மிஞ்சிவது போல் செயல்படுவதால் பிளேயிங் லெவனில் சேர்க்க தோனி முடிவு எடுத்துள்ளார். ஆனால் சிவம் துபேவை எந்த இடத்தில் பேட்டிங்கில் பயன்படுத்துவது என்ற குழப்பத்தில் தோனி தற்போது தள்ளப்பட்டுள்ளார். சிவம் துபேவால் சிஎஸ்கே வின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.

Story first published: Tuesday, March 22, 2022, 13:25 [IST]
Other articles published on Mar 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+