Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2022 - சிஎஸ்கே பிளேயிங் லெவன்.. எந்த ஆல் ரவுண்டருக்கு இடம்..? தோனி முக்கிய முடிவு

சூரத்: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக முதல் அணியாக சிஎஸ்கே தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு காலம் மிகவும் குறைவாக இருப்பதால், பிளேயிங் லெவனை முடிவு செய்வதில் தோனி தீவிரமாக இறங்கியுள்ளார்.

எப்போதும் இல்லாத வகையில், அனைத்து வீரர்களும் முழு உடல் தகுதியுடன் இருந்தால் களமிறங்கும் 11 பேரும் பேட்ஸ்மேனாக இருக்கும் வகையில் அணி அமைக்கக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வீரர்கள்

வெளிநாட்டு வீரர்கள்

இதனால் எந்த ஆல் ரைவுண்டரை விடுவது யாரை சேர்ப்பது என்ற குழப்பத்தில் தோனியும், ஃபிளமிங்கும் உள்ளனர். வெளிநாட்டு வீரர்களாக டேவான் கான்வே, மொயின் அலி, பிராவோ, ஆடம் மிலின் அல்லது பிரிட்டோரியஸ் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

சிவம் துபே

சிவம் துபே

தற்போது இந்திய வேகப்பந்து ஆல்ரவுண்டராக யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் தோனி உள்ளார். இந்திய வீரர் சிவம் துபே பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். மேலும் இந்திய அணியில் விளையாடியுள்ள அனுபவமும் சிவம் துபேவுக்கு உள்ளது. இதனால் சிவம் துபேவை நடுவரிசையில் களமிறக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஹங்கர்கேகர்

ஹங்கர்கேகர்

எனினும் தோனியின் முடிவு இந்திய அண்டர் 19 வீரர் ராஜவர்த்தனே ஹங்கர்கேகராக இருக்கலாம் என தெரிகிறது. ஹர்திக் பாண்டியாவை போல் பேட்டிங் செய்யும் அவர், பந்துவீச்சிலும் நல்ல வேகத்துடன் வீசக்கூடியவர். இதனால் ஹங்கர்கேகரை கீழ்வரிசையில் அதாவது 7வது 8வது வீரராக களமிறக்கலாம்.

Recommended Video

IPL 2022 Schedule வெளியானது.. CSK-க்கு காத்திருக்கும் பலப்பரீட்சை
குழப்பம்

குழப்பம்

ஆனால் பிளேயிங் லெவனில் இருவருக்குமே இடம் கிடைப்பது சந்தேகம். ஏனெனில் வெளிநாட்டு வீரர்களையும், ருத்துராஜ், தோனி, ஜடேஜா, அம்பத்தி ராயுடுவையும் சேர்த்தாலே 8 பேர் இடம்பெற்றுள்ளனர். எஞ்சியுள்ள 3 இடத்தில் 1 வேகப்பந்துவீச்சாளரை சேர்த்து, இந்த 2 ஆல் ரவுண்டரையும் சேர்த்துவிடலாமா, இல்லை ஒருவருக்கு மட்டும் தான் இடம் விழங்கலாமா என்ற குழப்பத்தில் தோனி உள்ளார்.

Story first published: Wednesday, March 9, 2022, 11:14 [IST]
Other articles published on Mar 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+