Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயமா இருக்கா.. இனி இன்னும் பயங்கரமா இருக்கும்.. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அளிக்க உள்ள டென்ஷன்

மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசன் கிட்டதட்ட பாதி கிணறை தாண்டிவிட்டது. ஆனால், நட்சத்திர அணியான சிஎஸ்கே ஒரு வெற்றியை மட்டும் தான் பெற்றுள்ளது.

இதனால் சிஎஸ்கே அணி இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கொஞ்சம் கடினம் தான். இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் கூட 95 சதவீதம் பளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் எல் கிளாசிக்கோ என அழைக்கப்படும் சிஎஸ்கே, மும்பை மோதும் போட்டி வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

பிளே ஆப் வாய்ப்பு

பிளே ஆப் வாய்ப்பு

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் குறைந்தது 8 முதல் 9 போட்டியலாவது வெற்றி பெற்று இருக்க வேண்டும். இதில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணி அதிக வெற்றிகளை பெற்றால், மூன்றாவது அல்லது 4வது இடம் பிடிக்கும் அணிகள் 7 போட்டியில் வென்று இருந்தாலும் போதும். மேலும் ரன்ரேட் அதிகமாக இருப்பது மிகவும் முக்கியம்.

குறைந்தது 7 வெற்றி

குறைந்தது 7 வெற்றி

அந்த வகையில் சிஎஸ்கே அணி இன்னும் 8 போட்டியில் குறைந்தது 7 அல்லது 6 போட்டியில் வெல்ல வேண்டும். மும்பை அணியை பொறுத்தவரை எஞ்சிய அனைத்து போட்டியிலும் வெல்ல வேண்டும். இதனால் வியாழக்கிழமை நடைபெறும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிகவும் முக்கியமானவையாக அமைந்துள்ளது.

கிறிஸ் ஜார்டன்

கிறிஸ் ஜார்டன்

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு, நடப்பு தொடரில் களமிறங்கி உள்ள அனைத்து அணிகளை விடவும் மோசமான பந்துவீச்சாளர்களை அடைய உள்ள அணியாக இருக்கிறது. கடந்த சீசன்களில் கேதர் ஜாதவை எப்படி தோனி அணியில் வைத்து அழகு பார்த்தாரோ, அதே போல் இம்முறை கிறிஸ் ஜார்டனை வைத்து தோனி அழகு பார்க்கிறார்.

ரொம்ப கஷ்டம்

ரொம்ப கஷ்டம்

இதனால் இம்முறை கிட்டதட்ட பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாது. இனி வரும் போட்டிகளில் தனிப்பட்ட வீரர்கள் ஏவரேனும் சதமோ இல்லை 5 விக்கெட்களோ வீழ்த்துகிறார்களோ அப்போது தான் சிஎஸ்கே அணியால் வெல்ல முடியும். அதனால் சிஎஸ்கே ரசிகர்களும் பிரசர் மாத்திரைகளை கையில் வைத்து கொண்டு தான் இனி போட்டிகளை பார்க்க வேண்டும்.

Story first published: Tuesday, April 19, 2022, 21:34 [IST]
Other articles published on Apr 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+