Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சம்பவம் இருக்கு!!.. சிஎஸ்கே - மும்பை ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ஏற்பாடு.. பிசிசிஐ-ன் கலக்கல் முடிவு!

மும்பை: சிஎஸ்கே - மும்பை ரசிகர்களுக்காக வேண்டுமென்றே ஐபிஎல் அட்டவணையில் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது பிசிசிஐ.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் அட்டவணையை இறுதி செய்யும் பணிகளில் பிசிசிஐ மும்முரமாக களமிறங்கியுள்ளது.

அந்தவகையில் மார்ச் 26ம் தேதி முதல் போட்டி நடைபெறும் என்றும் மே 29ம் தேதியன்று இறுதிப்போட்டி நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகள்

புதிய விதிமுறைகள்

இந்தாண்டு 10 அணிகள் மோதிக்கொள்வதால் ஏ, பி என 2 குரூப்களாக பிரித்துக்கொள்வார்கள். அதில் ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதிக்கொள்ளும். அதன் பின்னர் மற்றொரு குரூப்பில் உள்ள 5 அணிகளில் ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோதும். மற்ற 4 அணிகளுடனும் தலா ஒரே ஒரு முறை மட்டும் மோதிக்கொள்ளும்.

குரூப்கள்

குரூப்கள்

அதன்படி ஏ குரூப்பில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. "பி" குரூப்பில் சிஎஸ்கே, ஐதராபாத், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டான்ஸ் அணிகள் மோதுகின்றன.

சுவாரஸ்ய விஷயம்

சுவாரஸ்ய விஷயம்

இதில் சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வேறு வேறு குரூப்களில் இடம்பெற்றுள்ளன. இரண்டு குரூப்களிலும் சம பலமான அணிகள் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவை ஒரே ஒரு முறை தான் மோதிக்கொள்ளுமா என்ற வருத்தம் ரசிகர்களிடம் இருக்கலாம்.

Recommended Video

IPL 2022: CSK and captain MS Dhoni are in upset, after BCCI makes a bold decision | Oneindia Tamil
பிசிசிஐ ப்ளான்

பிசிசிஐ ப்ளான்

ஆனால் சிஎஸ்கே மற்றொரு குரூப்பில் 2 முறை மோதவுள்ள அந்த அணியாக மும்பை தான் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 குரூப்களில் பெரும் பலம் கொண்ட அணிகளும் இருக்கும். அதேவேளையில் அந்த இரண்டு அணிகளும் மோதிக்கொளும் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

Story first published: Friday, February 25, 2022, 17:58 [IST]
Other articles published on Feb 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+