Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை - சிஎஸ்கேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ப்ளே ஆஃப்-ல் இப்படி ஒரு விஷயமா..?? சிக்கிய மற்ற அணிகள்!

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிக்கு மட்டும் ஸ்பெஷல் பவர் ஒன்று கிடைத்துள்ளது.

கட்ந்த ஒன்றரை மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

லீக் சுற்றில் மீதம் 3 போட்டிகளே உள்ள சூழலில் ப்ளே ஆஃப் சுற்றுக்கான மோதல்கள் அதிகரித்துள்ளன.

 ப்ளே ஆஃப் ரேஸ்

ப்ளே ஆஃப் ரேஸ்

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துவிட்டது. இதே போல லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகளும் ப்ளே சுற்றுக்குள் நுழைந்துவிட்டன. ஆனால் அது 2வது இடமா அல்லது 3வது இடமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

4வது இடம் யாருக்கு?

4வது இடம் யாருக்கு?

இதே போல 4வது இடத்தில் ஆர்சிபி அணி 16 புள்ளிகளுடன் இருந்து வருகிறது. எனினும் ஆர்சிபி அணிக்கு போட்டியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4வது இடத்தை பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இவை அனைத்தும் இன்று மற்றும் நாளைக்குள் தெரிந்துவிடும்.

அப்படி என்ன விஷயம்

அப்படி என்ன விஷயம்

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் தான் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடிக்க முடியும். இல்லையென்றால் ப்ளே ஆஃப் சுற்றில் 2வது வாய்ப்பை இழந்துவிடும். இதே போல சிஎஸ்கே அணியும் 10வது இடத்தை தவிர்க்க போராடவுள்ளது.

 மும்பை அணி பவர்

மும்பை அணி பவர்

நாளை நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் தான் ஆர்சிபி அணியால் 4வது இடத்தை உறுதி செய்ய முடியும். ஒருவேளை டெல்லி வெற்றி பெற்றால் அந்த அணி 4வது இடத்திற்கு முன்னேறிவிடும். எனவே தொடரில் இருந்து வெளியேறிய போதும், மும்பை, சிஎஸ்கே போட்டிகள் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்க தான் செய்கிறது.

Story first published: Friday, May 20, 2022, 16:41 [IST]
Other articles published on May 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+