For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிளே ஆப் சுற்று யாருக்கு வாய்ப்பு.. சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் இன்னும் எத்தனை வெற்றி தேவை? முழு விவரம்

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடரில் மும்பை அணி ஏற்கனவே நாக் அவுட் ஆகிவிட்டது.

எஞ்சியுள்ள 9 அணிகளுக்கு இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இதில் குஜராத் அணி 8 வெற்றியை பெற்றாலும், முதல் 2 இடத்தை பிடிக்க போராடும்.

குஜராத் அணி இன்னும் பஞ்சாப், மும்பை, சிஎஸ்கே, லக்னோ, பெங்களூரு அணிகளுடன் மோதுகின்றன.

லக்னோ, ராஜஸ்தான்

லக்னோ, ராஜஸ்தான்

இதனையடுத்து 2வது இடத்தில் லக்னோ அணிகள் 14 புள்ளிகளுடன் உள்ளது. எஞ்சிய 4 போட்டியில் குறைந்தபட்சம் 1 போட்டியில் வெல்ல வேண்டும். இரண்டில் வென்றால் கொஞ்சம் பாதுகாப்பு தான். இன்னும் கொல்கத்தா, குஜராத், ராஜஸ்தான் அணியுடன் விளையாடுகிறது. ராஜஸ்தான் அணி 3வது இடத்தில் 12 புள்ளிகளுடன் உள்ளது. இதில் 5 போட்டியில் குறைந்தபட்சம் 2 போட்டியில் வெல்ல வேண்டும்.

ஐதராபாத், ஆர்சிபி

ஐதராபாத், ஆர்சிபி

ஐதராபாத் அணி 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இதில் அந்த அணி எஞ்சிய 5 போட்டியில் 4 போட்டியில் வெல்ல வேண்டும். 3ல் வென்றாலே போதும், இருந்தாலும் ரன் ரேட் குறைவாக இருப்பதால் அதிக புள்ளிகள் முக்கியம். இதே போன்று 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் பெங்களூரு அணி உள்ளது. எஞ்சிய 4 போட்டியில் 3 ஆட்டத்திலாவது பெங்களூரு வெல்ல வேண்டும்.

டெல்லி, பஞ்சாப்

டெல்லி, பஞ்சாப்

டெல்லி அணி 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இதில் எஞ்சிய 5 போட்டியில் ஐந்திலும் டெல்லி வெல்ல வேண்டும். நான்கில் வென்றால் 16 புள்ளிகளுடன் தகுதி பெறலாம். ஆனால் மற்ற அணிகளின் தயவு முக்கியம். பஞ்சாப் அணி 7 வது இடத்தில் 8 புள்ளிகளுடன் உள்ளது. குறைந்தபட்சம் ஐந்து போட்டியில் 4 ஆட்டங்களில் வெல்ல வேண்டும்.

கொல்கத்தா, சிஎஸ்கே

கொல்கத்தா, சிஎஸ்கே

கொல்கத்தா அணி 8வது இடத்தில் 6 புள்ளிகளுடன் உள்ளது. இதனால் எஞ்சிய 5 போட்டியில் 5 ஆட்டங்களில் வெல்ல வேண்டும். கொல்கத்தா அணி எஞ்சிய போட்டியில் லக்னோ, ஐதராபாத், சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுடன் மோத உள்ளது. சென்னை அணி 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. எஞ்சிய போட்டியில் பெங்களூரு, டெல்லி, மும்பை, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுடன் மோத வேண்டும், இதில் மும்பை, குஜராத் அணிகளுக்கு எதிரான ஆட்டம் மிகவும் கடினமாக இருக்கும்.

Story first published: Monday, May 2, 2022, 17:33 [IST]
Other articles published on May 2, 2022
English summary
IPL 2022- CSK and other teams Play off scenario பிளே ஆப் சுற்று யாருக்கு வாய்ப்பு.. சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் இன்னும் எத்தனை வெற்றி தேவை? முழு விவரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+