இதுதான் தோனியின் குணம்.. ஆட்டத்தின் போது செய்த விஷயம்.. பாண்ட்யாவுக்கு நெருக்கடி தரும் ரசிகர்கள்!!
மும்பை: சிஎஸ்கே அணியை தோல்விக்கு இழுத்துச் செல்லவிருந்த இளம் வீரருக்கு தோனி கொடுத்த பதில் ரசிகர்களை பூரிப்படைய வைத்துள்ளது.
Recommended Video
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்திருந்த சிஎஸ்கே அணி நேற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஆர்சிபிக்கு எதிரான இந்த போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது.

சிஎஸ்கே பேட்டிங்
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் ராபின் உத்தப்பா, ஷிவம் தூபே அதிரடி காட்ட 216/ 4 ரன்களை குவித்தது. இதன் பின்னர் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 193 /9 ரன்களை மட்டுமே எடுத்தது. சென்னையின் இந்த வெற்றியை விட, தோனி ஒரே ஒரு செயல் தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

முகேஷின் தவறு
நேற்றைய போட்டியில் ஆர்சிபி வீரர் பிரபு தேசாய் 18 பந்துகளில் 34 ரன்களை விளாசி சிஎஸ்கேவுக்கு தலைவலி தந்தார். அப்போது 14வது ஓவரில் பிராவோ வீசிய பந்தை அவர் தூக்கி அடிக்க கேட்ச்-க்கு சென்றது. மிகவும் சுலபமாக வந்த அந்த கேட்ச்-ஐ இளம் வீரர் முகேஷ் சௌத்ரி தவறவிட்டார். இதனை கூட ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கொந்தளித்த ரசிகர்கள்
ஆனால் 15வது ஓவரில் அதிரடி காட்டி வந்த தினேஷ் கார்த்திக் கொடுத்த அழகான கேட்ச்-ஐயும் முகேஷ் சொத்ரி தவறவிட்டார். அந்த கேட்ச்சால் ஆட்டமே மாறப்போகிறது என்ற நிலை இருந்தது. இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் முகேஷ் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். சிஎஸ்கே தோற்றால் அவர் தான் காரணம் எனும் அளவிற்கு சென்றுவிட்டனர். இறுதியில் தீக்ஷணா அடுத்த பந்திலேயே விக்கெட் எடுத்து காப்பாற்றினார். எனினும்

பாண்ட்யாவுக்கு சிக்கல்
சமீபத்தில் குஜராத் அணியின் சீனியர் வீரர் முகமது ஷமி ஃபீல்டிங்கில் சொதப்பியதற்காக அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மிகவும் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்டார். சீனியர் என்றும் பாராமல் களத்தில் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது தோனியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என ஹர்திக்கிற்கு ரசிகர்கள் பாடம் எடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications