Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வின் மெகா தவறுகள்.. இதை சரி செய்தால் வெற்றி நிச்சயம்.. ஆனால் நடக்குமா?

மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் நடப்பு சாம்பியனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. ஏலம் முடிவில் 11 வீரர்களும் பேட்டிங் செய்ய கூடிய பலமான அணியை உருவாக்கியது.

ஆனால், சீசன் தொடங்கியதும் தொடர்ந்து 2 போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. இதற்கு இயற்கையாகவே சில காரணங்களும் அமைந்துவிட்டது.

முதலில் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக விளையாடாமல் போனது. விசா சிக்கலால் மொயின் அலி முதல் ஆட்டத்தில் இல்லாமல் போனது என பல சிக்கல்கள் இருந்தது.

எதிர்மறையான சூழல்

எதிர்மறையான சூழல்

அதையும் மீறி சிஎஸ்கே சில தவறுகளை செய்தது. அதில் முதல் தவறு, தொடர் தொடங்குவதற்கு முன்பு தோனி கேப்டன் பதவியை விட்டு விலகியது, அணியில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கிவிட்டது. தொடர் தொடங்க ஒரு மாதத்திற்கு முன்பே சொல்லியிருந்தால் ஒரு பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது. ஆனால், இவ்வளவு தாமதமான அறிவிப்பு ஒரு விதமான எதிர்மறையான சூழலை அணிக்குள்ளும், அணிக்கு வெளியும் உருவாக்கிவிட்டது.

இரட்டை தலைமை

இரட்டை தலைமை

சரி, அணியின் கேப்டன் ஜடேஜா என்றாலும், முழ பொறுப்பையும் அவருக்கு சிஎஸ்கே நிர்வாகம் வழங்கவில்லை. அவர் வெறும் பொம்மை கேப்டனாக செயல்பட, மற்றவை அனைத்தும் தோனி தான் செய்கிறார். தோனி அறிவுரை மட்டுமே வழங்க வேண்டுமே தவிர , ஜடேஜா பணியை செய்ய கூடாது. இரட்டை தலைமை என்பது எந்த அணிக்கும் சரியாக அமையாது.

இந்திய வேகம்

இந்திய வேகம்

சிஎஸ்கே அணியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தற்போது போதிய அனுபவம் இல்லை. இதனால் அவர்களை பயன்படுத்துவதற்கு பதில், இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருக்கலாம். லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்த தவறை தான் சிஎஸ்கே செய்தது. தற்போது வேகப்பந்துவீச்சில் பிரச்சினை என்றால் பிராவோ, பிரிட்டோரியஸை மட்டுமே மையமாக வைத்து, பந்துவீச்சை கட்டமைக்கலாம்.

ஹங்கர்கேகர்

ஹங்கர்கேகர்

ராஜவர்த்தனே ஹங்கர்கேகர் போன்ற திறமையான அதிரடி ஆல்ரவுண்டரை பெஞ்சில் அமர வைத்து வேடிக்கை பார்ப்பது என்ன விதமான செயல் திட்டம் என்றே தெரியவில்லை. ஹங்கர்கேகர் அதிவேகத்தில் பந்துவீச கூடியவர். அவரை தான் அணியில் தேர்வு செய்ய வேண்டும். அதே போல் எக்காரணத்தை கொண்டும் அனுபவம் இல்லாத வீரர்களை கொண்டு கடைசி 2 ஓவரை வீச வைக்க கூடாது.

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

பிராவோ, பிரிட்டோரியஸ், ஹங்கர்கேகர் என 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஜடேஜா, மொயின் அலி, பிரசாந்த் சோலங்கி என 3 சுழற்பந்துவீச்சாளர்களையும் வைத்து யுத்திகளை மாற்றி அமைக்க வேண்டும். தீபக் சாஹர் அணிக்குள் வரும் வரை அணியில் இருக்கும் குறையை இப்படி சரி செய்தால் நன்மையாக இருக்கும்.

Story first published: Sunday, April 3, 2022, 18:13 [IST]
Other articles published on Apr 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+