இவ்வளவு நாள் எங்க இருந்துப்பா?மும்பை தொடக்க வீரர்கள் டக் அவுட்.. சிஎஸ்கே வீரர் முகேஷ் சௌத்ரி அபாரம்
மும்பை: ஐபிஎல் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
சென்னை அணியில் கிறிஸ் ஜார்டன் நீக்கப்பட்டு, தென்னாப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ் அணியில் சேர்க்கப்பட்டார். இதே போன்று மொயின் அலி நீக்கப்பட்டு அதிரடியாக நீக்கப்பட்டு, மிட்செல் சாட்ணர் அணியில் சேர்க்கப்பட்டார்.
இதே போன்று மும்பை அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டேனியல் சாம்ஸ், மெர்டித் மற்றும் ஹிரித்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்ப அதிர்ச்சி
இதனையடுத்து, மும்பை அணி பேட்டிங் செய்ய வந்தது. 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்ற முனைப்பில் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர். தொடக்க ஓவரை வீசிய சிஎஸ்கே இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரி அனல் பறக்க பந்துவீசி, சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

ரோகித் டக் அவுட்
முதல் ஓவரின் 2வது பந்திலேயே ரோகித் சர்மா, சாண்டனரிடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார்.இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 14 முறை டக் அவுட்டாகி, அதிக டக் அவுட்டான வீரர் என்ற சோகமான சாதனையை ரோகித் சர்மா படைத்தார். 2வது இடத்தில் பியூஸ் சாவ்லா 13 டக் அவுட் உடன் உள்ளார்.

மும்பை தடுமாற்றம்
இதே போன்று முதல் ஓவரின் 5வது பந்தில் முகேஷ் சௌத்ரி வீசிய 5வது பந்தில் இஷான் கிஷன் கிளின் போல்ட் ஆகி டக் அவுட் ஆனார்.இதே போன்று முகேஷ் சௌத்ரி வீசிய 2வது ஓவரில் பிரவீஸ் தோனியிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதன் மூலம் மும்பை அணி 23 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.
Recommended Video

வீணடித்த சிஎஸ்கே
இன்னும் 2 விக்கெட்டை சிஎஸ்கே எடுத்திருக்க வாய்ப்பு உருவானது. மிட்செல் சாண்டனர் வீசிய ஓவரில் சூர்யகுமார் இறங்கி வந்து அடிக்க முயல, அதனை தோனி ஸ்டம்ப் அவுட் செய்யாமல் மிஸ் செய்தார். இதே போன்று முகேஷ் சௌத்ரி பந்துவீச்சில் திலக் வர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பை பிராவோ மிஸ் செய்தார். இதே போன்று பிரவிஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார்.


Click it and Unblock the Notifications