Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீபக் சஹாரின் பெருந்தன்மை..வெளியில் இருந்து சிஎஸ்கேவுக்கு உதவி.. நெகிழ்ச்சியுடன் கூறிய முகேஷ் சௌத்ரி

மும்பை: சென்னை அணிக்கு தீபக் சஹார் வெளியில் இருந்து எப்படி உதவி வருகிறார் என்பது குறித்து பவுலர் முகேஷ் சௌத்ரி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

நடப்பு தொடருக்காக சிஎஸ்கே ரூ.14 கோடி கொடுத்து வாங்கிய தீபக் சஹாரால் இந்தாண்டு விளையாட முடியவில்லை.

கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

அசத்தும் முகேஷ் சௌத்ரி

அசத்தும் முகேஷ் சௌத்ரி

தீபக் சஹாரின் இடத்தை நிரப்புவதற்காக தான் முகேஷ் சௌத்ரி முயற்சித்து வருகிறார். 25 வயதான முகேஷ் சௌத்ரி, முதல் சில போட்டிகளில் மோசமாக சொதப்பினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இதுவரை 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்து சிஎஸ்கேவின் முன்னணி பவுலராக மாறியுள்ளார்.

தீபக் சஹார் காரணம்

தீபக் சஹார் காரணம்

இந்நிலையில் தனது கம்பேக்கிற்கு தீபக் சஹார் தான் காரணம் என முகேஷ் சௌத்ரி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தீபக் சஹாருடன் நான் தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். ஒரு சூழலை எப்படி கணிப்பது, அதனை எப்படி சமாளிப்பது என்பது குறித்து நிறைய விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார்.

முக்கியமான டிப்ஸ்

முக்கியமான டிப்ஸ்

தொடக்கத்தில் நான் சொதப்பிய போது, அவர் என்னை தொலைப்பேசியில் அழைத்து, நான் எதில் பின்தங்கியுள்ளேன் எனக் கூறினார். அப்போது, பேட்ஸ்மேனின் மீது எப்போதுமே கவனம் வைத்துக்கொள், தோனி என்ன சொல்கிறாரோ அதன்படி செய் மற்ற அனைத்தும் சிறப்பாக அமையும் எனக் கூறினார். அதனை சரிசெய்து தற்போது நல்ல பலனை பெற்றுள்ளேன். இக்கட்டான சூழலில் இருந்து தீபக் சஹார் தான் என்னை வழிநடத்தினார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

அணியில் இருந்து விலகி, வேறு இடத்தில் பயிற்சி பெற்று வந்தாலும், தீபக் சஹாரின் எண்ணங்கள் முழுவதும் சிஎஸ்கே மீதுதான் உள்ளது. பெங்களூருவில் இருந்துக்கொண்டு தன்னால் என்ன செய்ய முடியுமோ, அதனை செய்து அணிக்கு உதவி வருவது ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. தற்போது ஓரளவிற்கு குணமடைந்துள்ள தீபக் சஹார் ஒரு மாதத்திற்குள் பயிற்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, May 4, 2022, 16:41 [IST]
Other articles published on May 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+