For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டூப்ளசிஸுக்கு மாற்று கிடைச்சாச்சு!! அதிரடி மன்னனை குறைந்த தொகைக்கு சுருட்டிய சிஎஸ்கே.. செம ஸ்கெட்ச்

பெங்களூரு: சிஎஸ்கே அணியில் டூப்ளசிஸ் விட்டுச்சென்ற இடத்தை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல் மெகா ஏலத்தின் 2வது நாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காலையில் இருந்தே முன்னணி வீரர்களை வாங்காமல் பொறுமை காத்து வந்தது.

அந்த அணியின் திட்டம் என்னவென்பது புரியாமல் ரசிகர்கள் நீண்ட நேரமாக குழம்பி வந்தனர்.

சிஎஸ்கேவின் சொதப்பல்கள்

சிஎஸ்கேவின் சொதப்பல்கள்

கடந்த சீசனில் அணியின் முக்கிய தூணாக இருந்தது ஓப்பனிங் பார்ட்னர்ஷிப். ஆனால் இந்த முறை டூப்ளசிஸுக்காக ரூ. 6 கோடி கூட செலவளிக்கவில்லை. அவருக்கு மாற்று வீரர்களாக கருதப்பட்ட ஜேசன் ராய், டேவிட் வார்னர், ஷிகர் தவானையும் சென்னை அணி கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டது.

சோகமடைந்த ரசிகர்கள்

சோகமடைந்த ரசிகர்கள்

இதனால் ஓப்பனிங்கிற்கு வயதாகிவிட்டதாக கிண்டலடிக்கப்பட்ட ராபின் உத்தப்பா தான் ருதுராஜுடன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்துள்ளது சென்னை அணி. இன்று மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் ஏலம் விடப்பட்ட ஒவ்வொரு வீரராக சொல்லி வைத்தது போல சென்னை அணி தூக்கியது.

ஓப்பனிங் ரெடி

ஓப்பனிங் ரெடி

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 6 கோடிக்கும் மேல் சென்ற டூப்ளசிஸை விட்டுவிட்டு, சமீப காலத்தில் அதிரடி மன்னனாக விளங்கும் டெவோன் கான்வேவை ரூ. 1 கோடிக்கு ஏலம் எடுத்தது. நியூசிலாந்து அணி வீரரான கான்வே கடந்தாண்டு தான் சர்வதேச போட்டியில் அறிமுகமானார். ஆனால் இவரின் பேட்டிங் எதிரணிக்கு தலைவலி கொடுக்கும் வகையில் இருந்துள்ளது.

அதிரவைக்கும் புள்ளிவிவரம்

அதிரவைக்கும் புள்ளிவிவரம்

இதுவரை 20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 602 ரன்களை விளாசியுள்ளார். இதில் 4 அரைசதங்கள் அடங்கும். டி20 கிரிக்கெட்டிலேயே கான்வேயின் சராசரி மட்டும் 50.17 ஆக உள்ளது. இது கிட்டத்தட்ட விராட் கோலிக்கு நிகரான ஒன்றாகும். இவரின் ஆக்ரோஷ ஆட்டம் நிச்சயம் சென்னை அணிக்கு நல்ல தொடக்கம் கொடுக்கும்.

Story first published: Sunday, February 13, 2022, 17:48 [IST]
Other articles published on Feb 13, 2022
English summary
CSK finally found the replacement of Duplessis in IPL mega auction, Buys Devon Conway for the low budget
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+