Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி செய்தது சரிதானா? பொதுவெளியில் இளம் வீரரிடம் இப்படியா நடந்துக்கொள்வது.. முகம் சுளித்த ரசிகர்கள்

மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் எம்.எஸ்.தோனி எப்போதும் இல்லாத வகையில் பயங்கர கோபத்துடன் கத்தியது பேசுப்பொருளாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் தோனியே பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற முதல் போட்டியே வெற்றி தான்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 202/2 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 189/6 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை சந்தித்தது.

தோனியின் மறுமுகம்

தோனியின் மறுமுகம்

இக்கட்டான சூழலில் கேப்டன் பொறுப்பை ஏற்ற தோனி, மிகவும் வித்தியாசமாக காணப்பட்டார். கூல் கேப்டனான தோனி, களத்தில் எப்போதும் பரபரப்பாக இருந்ததை ரசிகர்கள் நேற்று பார்த்தனர். அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் முகேஷ் சௌத்ரியை திட்டியது, ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது.

கடைசி ஓவர் பரபரப்பு

கடைசி ஓவர் பரபரப்பு

கடைசி ஓவரில் 38 ரன்கள் தேவை என இருந்த போது, முதல் 2 பந்துகளில் பூரண் 10 ரன்களை அடித்துவிட்டார். இந்த சூழலில் 4வது பந்தை முகேஷ் சௌத்ரி வைடாக போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஃபீல்டர்கள் அனைவரும் ஆஃப் சைட் திசையில் இருக்க, முகேஷ் சௌத்ரி லெக் சைட் வைட் லைனில் போட்டார். இது தோனிக்கு கடும் ஆத்திரத்தை கிளப்பியது.

ஆத்திரமடைந்த தோனி

ஆத்திரமடைந்த தோனி

நீயாக ஒரு முடிவை எடுத்துக்கொள்வதா. என களத்திலேயே முகேஷை தோனி கடுமையாக திட்டினார். தோனியின் வார்த்தைகளால் அவரின் முகம் சுருங்கியது ரசிகர்களுக்கே வருத்தமாக இருந்தது. 'நம்ம தோனியா இது' எனும் அளவிற்கு ஆச்சரியமாக பார்த்தனர். எது எப்படி இருந்தாலும் முகேஷ் செய்தது தவறாக தான் பார்க்கப்படுகிறது.

முகேஷ் சௌத்ரி விளக்கம்

முகேஷ் சௌத்ரி விளக்கம்

இதுகுறித்து பேசிய அவர், கடைசி ஓவருக்காக தோனி என்னிடம் எதுவுமே ஸ்பெஷலாக கூறவில்லை. ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் மட்டும் வீசுமாறும், வேறு எதுவும் வித்தியாசமாக செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதாக முகேஷ் சௌத்ரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 2, 2022, 21:08 [IST]
Other articles published on May 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+