
பிளே ஆப் கனவு
எஞ்சிய 6 போட்டியிலும் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும். அப்படி வென்றாலும் ரன் ரேட் அதிகமாக இருக்க வேண்டும். இப்படி இக்கட்டான நிலையில் தான் சிஎஸ்கேக்கு தோனி கேப்டனாக திரும்பியுள்ளார். ஒரு போட்டியில் தோற்றால் கூட சிஎஸ்கேவின் பிளே ஆப் கனவு பறிபோய்விடும். ஆனால், தோனி நடப்பு சீசனில் கேப்டனாக முதல் போட்டியில் பலமான ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறார்.

ஐதாராபாத் பலம்
ஐதராபாத் அணியின் பலமே , அதன் வேகப்பந்துவீச்சு தான். எனினும் கடைசி ஆட்டத்தில் ஐதராபாத் அணி, குஜராத்திடம் தோல்வியை தழுவியது. இதனால் அந்த அணியின் நம்பிக்கை சற்று பாதிக்கப்பட்டு இருக்கும். இதனால், ஐதராபாத்தை சமாளிக்க தோனி புதிய திட்டத்தை வகுத்துள்ளார்.

தோனி பிளான்
அதாவது, ஐதராபாத் அணியின் நம்பிக்கையான வேகப்பந்துவீச்சாளர்களின் உத்வேகத்தை அழிப்பது. அதாவது, ஐதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்வது என்பது தான் பிளானே. புவனேஸ்வர் குமார், யான்சென், நடராஜன், உம்ரான் மாலிக் ஆகியோர் பந்துகளை பாரபட்சம் இல்லாமல் அடிக்க வேண்டும். அதே சமயம் விக்கெட்டையும் பறி கொடுக்க கூடாது.
Recommended Video

மொயின் அலி ரிட்டன்ஸ்
சென்னை அணியில் இன்றைய ஆட்டத்தில் மொயின் அலியும் களமிறங்குகிறார். இது சிஎஸ்கேக்கு பலத்தை மேலும் அதிகரிக்கும். இதே போன்று ஐதராபாத் பேட்டிங்கை சுழற்பந்துவீச்சு மூலம் கட்டுப்படுத்தவும் தோனி முடிவு எடுத்துள்ளார். சிஎஸ்கே அணியில் இலங்கை அணியின் குட்டி மலிங்காவும் களமிறங்கலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











