Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு வீரருக்கு மட்டும் ஸ்பெஷல் பயிற்சி.. இளம் புயலுக்காக நீண்ட நேரம் செலவிடும் தோனி.. என்ன ஸ்பெஷல்!!

சூரத்: சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு மட்டும் தோனி ஸ்பெஷல் பயிற்சி கொடுப்பது தெரியவந்துள்ளது.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்காக, சிஎஸ்கே வழக்கம் போல முதல் அணியாக பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது.

சிஎஸ்கே பயிற்சி முகாம்

சிஎஸ்கே பயிற்சி முகாம்

சூரத்தில் உள்ள லால்பாய் காண்ட்ராக்டர் மைதானத்தில், தோனி தலைமையில் 15 வீரர்கள் வரை கடந்த 4 - 5 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை அதிகப்படியான இளம் வீரர்கள் இருப்பதால், அவர்களை சிஎஸ்கேவுக்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும். மேலும் மும்பையில் உள்ளதை போன்ற களத்தை கொண்ட சூரத்தில் இந்த பயிற்சி முகாமை நடத்துவதால் கூடுதல் அனுபவம் கிடைக்கும் என தோனி கணித்துள்ளார்.

ஸ்பெஷல் ட்ரைனிங்

ஸ்பெஷல் ட்ரைனிங்

இந்நிலையில் இதில் ஒரே ஒரு வீரருக்கு மட்டும் தோனி நீண்ட நேரம் செலவழித்து பயிற்சி கொடுத்து வருவதாக தெரிகிறது. அது ரசிகர்கள் எதிர்பார்த்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தான். வேகப்பந்துவீச்சாளர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் என்ற 2 திறமைகளையும் ஒருசேர இருப்பதால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒருபடி மேல் வருவார் என வல்லுநர்கள் கூறினர்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

அதன்படியே தோனியும் அவருக்காக அதிக நேரம் செலவிடுகிறார். பயிற்சியின் போது, ஹங்கர்கேகருக்கு தோனி அறிவுரைகள் வழங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்தன. மேலும் தீபக் சஹாரின் இடத்தை ராஜ்வர்தனை வைத்துதான் தோனி ஈடுகட்டவுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

Recommended Video

IPL 2022: Want to be a good finisher like Dhoni -Rahul Tripathi | Oneindia Tamil
 அப்படி என்ன சிறப்பு

அப்படி என்ன சிறப்பு

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் விஜய் ஹசாரே, சையது முஷ்டக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடியவர். இவருடைய சிறப்பம்சம் ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு இன் ஸ்விங் செய்ய கூடியவர்.பொதுவாக ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு ரைட் ஹேண்ட் பவுலர்கள் அவுட் ஸ்விங் செய்வார்கள். ஆனால் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் இன் ஸ்விங் செய்வார். பவுலிங்கில் சுமார் 140கிமீ க்கு மேல் சாதாரணமாக வீசக்கூடியவர். மேலும் கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 9, 2022, 8:55 [IST]
Other articles published on Mar 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+