Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம்.. தோனி படைத்த புதிய வரலாறு.. கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!

மும்பை: சிஎஸ்கே அணி கேப்டன் தோனி டி20 கிரிக்கெட்டில் பிரமாண்ட சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளார்.

15வது ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரிவர அமையவில்லை.

11 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளதால் கிட்டத்தட்ட தொடரில் இருந்து வெளியேறிவிட்டது.

சிஎஸ்கேவின் சோகம்

சிஎஸ்கேவின் சோகம்

தீபக் சஹார் இல்லை, ஜடேஜாவின் கேப்டன்சி சொதப்பல், தொடர் தோல்விகள் என கவலையில் இருந்த ரசிகர்களுக்கு தோனி இந்தாண்டு காட்டிய அதிரடியே ஆறுதலாக இருந்தது. குறிப்பாக மும்பை மற்றும் டெல்லியுடன் கடைசி ஓவரில் காட்டிய அதிரடிகளில் விண்டேஜ் தோனியே வந்தது போன்று இருந்தது. இதுவரை 11 போட்டிகளில் 163 ரன்களை சேர்த்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 139 ஆகும்.

பிரமாண்ட சாதனை

பிரமாண்ட சாதனை

இந்நிலையில் பேட்டிங்கை போலவே விக்கெட் கீப்பிங்கிலும் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது டி20 கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கீப்பராக 200 கேட்ச்களை பிடித்த முதல் வீரர் என்ற வரலாற்றை தோனி படைத்தார். கடந்த மே 8ம் தேதி நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் ஷர்துல் தாக்கூரின் விக்கெட்களை எடுத்து இந்த சாதனையை படைத்தார்.

சாதனையாளர்கள் பட்டியல்

சாதனையாளர்கள் பட்டியல்

டி20 கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கீப்பராக அதிக கேட்ச்களை பிடித்தவர்களின் பட்டியலை காணலாம்.

  • எம்.எஸ்.தோனி - 200
  • தினேஷ் கார்த்திக் - 182
  • கம்ரான் அக்மல் - 172
  • குயிண்டன் டிக்காக் - 166
  • தினேஷ் ராம்டின் - 150
ஓய்வு குறித்த அறிவிப்பு

ஓய்வு குறித்த அறிவிப்பு

41வயதை நெருங்கிவிட்ட எம்.எஸ்.தோனி இந்தாண்டுடன் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசியிருந்த அவர், அடுத்தாண்டு மஞ்சள் நிற ஜெர்ஸியில் தான் இருப்பேன். ஆனால் எந்த பணியில் இருப்பேன் எனத்தெரியவில்லை என்பது போன்று கூறினார். இதன் மூலம் அவர் சிஎஸ்கே ஆலோசகராக நியமிக்கப்படலாம் எனத்தெரிகிறது.

Story first published: Tuesday, May 10, 2022, 17:53 [IST]
Other articles published on May 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+