Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சோனமுத்தா போச்சா” வீணாகிப்போன தோனியின் ப்ளான்.. பிசிசிஐ-ன் கடைசி நேர அறிவிப்பு.. சிஎஸ்கே அதிர்ச்சி

மும்பை: பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பால், தோனியின் மாஸ்டர் ப்ளான், சிஎஸ்கேவின் மகிழ்ச்சி என அனைத்தும் வீணாகியுள்ளது.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி வரும் மே 29ம் தேதி நடைபெறும்.

இதற்கான இறுதிகட்ட பணிகளில் பிசிசிஐ தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்த வார இறுதியில் அட்டவணை வெளியாகலாம்.

பிசிசிஐ-ன் அறிவிப்பு

பிசிசிஐ-ன் அறிவிப்பு

கொரோனா காரணமாக இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மும்பை, புனே நகரங்களில் நடைபெறவுள்ளது. எனவே அனைத்து அணிகளும் வரும் மார்ச் 8ம் தேதிக்குள் மும்பையில் ஆஜராக வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அங்குள்ள தனியார் ஹோட்டலில் அனைவரும் பயோ பபுளுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

கடுமையான குவாரண்டைன்

கடுமையான குவாரண்டைன்

அயல்நாட்டு வீரர்களுக்கு 5 நாட்கள் குவாரண்டைனும், இந்திய வீரர்களுக்கு 3 நாட்கள் குவாரண்டைனும் கட்டாயம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாரண்டைன் காலத்தில் எடுக்கப்படும் 3 கொரோனா பரிசோதனையிலும் நெகட்டீவ் என முடிவு வந்தால் வரும் மார்ச் 14ம் தேதி முதல் அணிகள் பயிற்சியை தொடங்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி

சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி

இந்நிலையில் பிசிசிஐ-ன் இந்த அறிவிப்பு சிஎஸ்கேவுக்கு பெரும் இடியாக அமைந்துள்ளது. சென்னை அணி தான் வழக்கமாக முதலில் பயிற்சி முகாமை தொடங்கும். அந்தவகையில் வரும் மார்ச் 2ம் தேதி முதல் சூரத்தில் உள்ள மைதானத்தில் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. சூரத்தில் தான் தோனியின் மாஸ்டர் ப்ளானே இருந்தது.

சூரத்தின் ஸ்பெஷல்

சூரத்தின் ஸ்பெஷல்

அதாவது மும்பையில் உள்ள பிட்ச்-ம், சூரத்தில் உள்ள பிட்ச்-ம் கிட்டத்தட்ட 75% ஒரே மாதிரியானவை ஆகும். எனவே அங்கு விளையாடி பயிற்சி பெற்றால் மும்பையில் ஆட சுலபமாக இருக்கும் என கணக்குப்போட்டார். அதன்படி 20 வீரர்கள் வரை சூரத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது பிசிசிஐ-ன் நடவடிக்கையால் அனைவரும் பயிற்சி முகாமிற்கு செல்லாமல் மும்பைக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சிஎஸ்கேவில் அனுபவ வீரர்கள் குறைவாக இருப்பதால் மும்பை களத்தை சமாளிப்பது சிரமம் தான்.

Story first published: Wednesday, March 2, 2022, 17:23 [IST]
Other articles published on Mar 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+