Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய கெட்டப்பில் கேப்டன் தோனி.. ஐபிஎல்-காக ஸ்பெஷல் ஏற்பாடு.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்

மும்பை: ஐபிஎல் தொடருக்காக தோனி போட்டுள்ள புதிய கெட்டப் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிரா மற்றும் புனேவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனி ரசிகர்களின் ஆசை

தோனி ரசிகர்களின் ஆசை

வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் வந்தாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு இருக்கும். அதுவும் ஒவ்வொரு ஆண்டும் சிஎஸ்கே கேப்டன் தோனி ஒவ்வொரு கெட்டப் மற்றும் ஹேர்ஸ்டைல்களில் காட்சியளித்து குஷி ஏற்படுத்துவார். அந்தவகையில் இந்தாண்டும் எந்த கெட்டப் இருக்கும், முடி இருக்குமா இருக்காதா? என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

வைரலாகும் புகைப்படம்

வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில் அவரின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் அதிக தலைமுடியுடன், காக்கிச்சட்டை பேண்ட் அணிந்துக்கொண்டு பஸ் ஓட்டுநர் போன்று காட்சி தருகிறார். அதுவும் சென்னையில் இருக்கும் ஓட்டுநர் போன்று எண்ட்ரி தருவார் எனத்தெரிகிறது.

விளம்பரம் தொடக்கம்

விளம்பரம் தொடக்கம்

அவர் இந்த கெட்டப்பை ஐபிஎல் தொடரின் விளம்பரத்திற்காக செய்துக்கொண்டுள்ளார். ஒளிபரபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தற்போது இருந்தே ஐபிஎல்-கான விளம்பர பணிகளை தொடங்கியுள்ளது. விரைவில் தோனியின் முழு விளம்பர வீடியோவும் வெளியாகும்.

ஐபிஎல் அட்டவணை

ஐபிஎல் அட்டவணை

ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் மொத்தமுள்ள 10 அணிகளும் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டு, புதிய வடிவத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் ஏ குரூப் "பி", சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத், , ஆர்சிபி, குஜராத் டைட்டான்ஸ், பஞ்சாப் அணிகள் இடம்பெற்றுள்ளன. பி குரூப்பில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ அணி, கொல்கத்தா, டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளன.

Story first published: Saturday, February 26, 2022, 18:50 [IST]
Other articles published on Feb 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+