Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாரும் சூனா பானாவா ஆயிட முடியுமா? கேப்டன்சி அழுத்தம், திணறும் ஜடேஜா.. சிஎஸ்கே எடுக்கபோகும் முடிவு

மும்பை : நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , இந்த ஆண்டு ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எஞ்சிய 6 போட்டியிலும் வென்றால் கூட, மற்ற அணிகளின் தயவு இல்லாமல் கொஞ்சம் கூட பிளே ஆப்க்கு செல்ல முடியாது.

இந்த நிலைக்கு, ஜடேஜாவின் கேப்டன்சி மற்றும் அவருடைய பேட்டிங், பந்துவீச்சு செயல்பாடு தான் காரணம் என்று கூறப்படுகிறது.

திணறும் ஜடேஜா

திணறும் ஜடேஜா

தனது தொழில்முறை கிரிக்கெட் பயணத்தில் ஜடேஜா இதுவரை ஒரே ஒரு முறை தான் அண்டர் 19 கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்துள்ளார். அவரை கொண்டு போய், தோனிக்கு மாற்றாக சிஎஸ்கே உட்கார வைத்தது. அதன் விளைவு அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் பவுலராக விளங்க கூடிய ஜடேஜா, தற்போது சோபிக்க தவறி வருகிறார்.

112 ரன்கள்

112 ரன்கள்

ஐபிஎல் தொடருக்கு முன்பு கூட, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஜடேஜா கலக்கினார். இதனால் சிஎஸ்கேரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் கேப்டன்சி அழுத்தத்தால் ஜடேஜாவின் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் 8 போட்டியில் விளையாடிய ஜடேஜா பேட்டிங்கில் மொத்தமாக 112 ரன்கள் தான் அடித்துள்ளார்.

பவுலிங் மோசம்

பவுலிங் மோசம்

இதில் அதிகபட்ச ஸ்கோரே 26 தான். இதே போன்று பந்துவீச்சிலும் மொத்தம் 5 விக்கெட்டுகளை தான் வீழ்த்தியுள்ளார். ஒரு ஓவருக்கு கிட்டதட்ட 9 ரன்கள் விட்டு கொடுத்துள்ளார். இதுவே பழைய ஜடேஜாவாக இருந்திருந்தால், நேற்று 3 ஓவரில் 41 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இருந்த சூழலுக்கு, ஒரு ஓவர் எஞ்சிய நிலையில் போட்டியை முடித்திருப்பார்.

கேப்டனை மாற்றுங்கள்

கேப்டனை மாற்றுங்கள்

ஆனால் நேற்று ஆட்டத்தில் பேட்டிங் செய்ய ஜடேஜா அவ்வளவு திணறினார். இதே போன்று ஜடேஜாவின் ஃபில்டிங் திறனும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா பக்கம் பந்த உயர பறந்தாலே, அது அவுட் தான் என்று ரசிகர்கள் சொல்வார்கள். ஆனால் இந்த தொடரில் ஜடேஜா எளிய கேட்ச்சை கூட விடுகிறார். இதனால் ஜடேஜா கேப்டன் பதவிக்கு சரியான நபர் கிடையாது. அவரை மாற்றி ருத்துராஜ் போன்ற இளம் வீரரை கேப்டனாக போடுவது தான் அணிக்கு நல்லது.

Story first published: Tuesday, April 26, 2022, 11:14 [IST]
Other articles published on Apr 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+