For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் வந்துட்டாரு..! இனி பேட்டிங்கில் சிக்கல் இருக்காது.. ஆர்சிபிக்கு எதிராக தோனி முக்கிய முடிவு

புனே: ஐபிஎல் 15வது சீசனில் 49வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இன்றைய ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதமாகவும், பந்து மெதுவாக பேட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டாஸ் வென்ற கேப்டன் தோனி, பந்துவீசுவதாக அறிவித்தார். ஆர்சிபி அணியில் கார்த்திக் முழு உடல் தகுதியுடன் உள்ளதால் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. ஐபிஎல் ப்ளே ஆஃப் குறித்து முக்கிய அப்டேட்.. பிசிசிஐ அறிவிப்பு!! ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. ஐபிஎல் ப்ளே ஆஃப் குறித்து முக்கிய அப்டேட்.. பிசிசிஐ அறிவிப்பு!!

மொயின் அலி ரிட்டர்ன்

மொயின் அலி ரிட்டர்ன்

சிஎஸ்கே அணியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியும் முழு உடல்தகுதியை பெற்றுள்ளதால், அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். மிட்செல் சாண்ட்னர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இன்றைய ஆட்டத்திலும் பிராவோ, சிவம் துபே ஆகியோர் பிளேயிங் லெவனில் இல்லை.

தோனி எடுத்த முடிவு

தோனி எடுத்த முடிவு

முதலில் பேட் செய்தவர்களே இந்த ஆடுகளத்தில் அதிக முறை வென்றுள்ளனர். ஆனால் தோனியோ, இந்த ஆடுகளத்தில் டாஸ் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. எங்கள் அணியில் ரன் குவிக்கவும், ரன்களை சேஸ் செய்யவும் திறமையான பேட்ஸ்மேன்கள் இருப்பதாக தோனி நம்பிக்கை தெரிவித்தார்.

2 விஷயங்களில் கவனம்

2 விஷயங்களில் கவனம்

கடந்த போட்டியில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அதனை தொடர்ந்து வெற்றிகரமாக செய்ய வேண்டும். நாங்கள் 2 இடத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், ஒன்று பந்துவீசும் போது ஒரு சில ஓவர்களில் அதிக ரன்களை விட்டு தருகிறோம். மற்றொன்று, கிரிக்கெட் விளையாடும் அனைவருக்குமே தெரியும், எங்கள் வீரர்கள் கேட்ச் பிடிப்பதில் தீவிர பயிற்சி எடுக்க வேண்டும் என்று தோனி தெரிவித்தார்.

Recommended Video

RCB vs CSK - Challengers Get Past The Super Kings To Get Into The Top Four | Oneindia Tamil
டுபிளஸிஸ் மகிழ்ச்சி

டுபிளஸிஸ் மகிழ்ச்சி

ஆர்சிபி கேப்டன் டுபிளஸிஸ் கூறுகையில், நாங்கள் முதலில் பேட் செயவதாக இருந்தோம். டாஸ் பற்றியும், ஆடுகளம் பற்றியும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை கடந்த போட்டியில் நாங்கள் அனைத்தையும் சரியாக செய்தோம். ஒரு 10 ரன்கள் குறைவாக அடித்ததால் தோற்றோம். இன்று வீரர்கள் அனைவரும் நல்ல உத்வேகத்துடன் உள்ளனர்.

Story first published: Wednesday, May 4, 2022, 20:10 [IST]
Other articles published on May 4, 2022
English summary
IPL 2022 – CSK Captain MS Dhoni added moeen ali to playing xi and choose to bowl இனி பேட்டிங்கில் சிக்கல் இருக்காது.. ஆர்சிபிக்கு எதிராக தோனி முக்கிய முடிவு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X