தீபக் சாஹருக்கு பதில் யார்? - 2 வீரர்களிடையே கடும் போட்டி - முடிவு எடுப்பதில் சிஎஸ்கே தயக்கம்
சூரத்: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக சிஎஸ்கே அணி முதல் அணியாக சூரத்தில் பயிற்சியை தொடங்குகிறது.
இதற்காக 40 பேர் கொண்ட படையுடன் சிஎஸ்கே புதிய வகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இனி வரும் நாட்களில் அணியை 2ஆக பிரித்து, பயிற்சி ஆட்டத்தை நடத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு எடுத்துள்ளது.

தீபக் சாஹர்
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டார் பவுலரான தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் குணமடைந்து அவர் அணிக்கு திரும்புவதற்குள் பாதி ஐபிஎல் தொடர் முடிந்துவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தீபக் சாஹருக்கு முதலீடு செய்த 14 கோடி ரூபாய் வீணாகியுள்ளது.

தோனி முடிவு
எனினும் தோனி பிளான் பியை கையில் எடுத்துள்ளார். தீபக் சாஹருக்கு பதிலாக வெளிநாட்டு வீரரை அணியில் சேர்த்தால், அது அணியின் Combination-ஐ பாதிக்கும் என்பதால் இந்திய வீரரை அணியில் சேர்க்க தோனி முடிவு எடுத்துள்ளார். இதற்காக தோனி தேர்வு செய்துள்ள 2 இந்திய வீரர்கள் ஆசிஃப் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தான்.

அதிவேக பந்துவீச்சாளர்கள்
இருவருமே 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் என்பதால் தோனி இந்த முடிவை எடுத்துள்ளார். இதற்காக, இவ்விருவருக்கும் தோனி சிறப்பு பயிற்சி அளிக்க பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜியிடம் கூறியுள்ளார். இதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவருக்கே அணியில் இடம் என்று தோனி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சிஎஸ்கே அறிவிப்பு
இதனை உறுதிப்படுத்தும் விதமாக நமது வேகப்பந்துவீச்சாளர்கள் என்று இவ்விருவரும் இருக்க கூடிய புகைப்படத்தை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. ஆசிஃப் மற்றும் தேஷ்பாண்டே என இருவருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் உள்ளது. எனினும் இவ்விருவரும் அதிக ரன்களை விட்டு கொடுக்க வாய்ப்புள்ளது. இதனால் தோனி என்ன செய்யப்போகிறார் என்று பொறுத்து இருத்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications