Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர கொண்டு வாங்க.. சிஎஸ்கேவில் குதிக்கும் 2வது இலங்கை வீரர்.. தோனி அதிரடி முடிவு.. காரணம் தெரியுமா??

மும்பை: சென்னை அணியின் அடுத்த போட்டியில் முக்கிய பவுலரை நீக்கி தோனி அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினமான ஒன்றாக உள்ளது.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

சிஎஸ்கே அணி நிலைமை

சிஎஸ்கே அணி நிலைமை

சென்னை அணிக்கு மீதம் 5 போட்டிகள் உள்ளன. இந்த 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதுவும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும். ஆனால் அதுதான் சிஎஸ்கேவில் சிரமமாக பார்க்கப்படுகிறது. சென்னை அணியில் முக்கிய கேட்ச்-களை தவறவிடுவது வழக்கமாக மாறிவிட்டது.

தோனி அதிரடி முடிவு

தோனி அதிரடி முடிவு

ஐதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அடுத்தடுத்து கேட்ச்களை விட்டதால் 13 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றது. எனவே இதனை சரிசெய்ய ஏதேனும் ஒரு வீரரை மாற்ற முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என இரண்டிலுமே சொதப்பி வரும் டுவைன் பிரிட்டோரியஸை நீக்க அதிரடி முடிவெடுத்துள்ளார்.

புதிய வீரரின் வருகை

புதிய வீரரின் வருகை

அவருக்கு மாற்று வீரராக இலங்கையில் இருந்து வந்துள்ள மதீஷா பதிரானாவை களமிறக்குகின்றனர். கடந்த சில நாட்களாக சிஎஸ்கேவில் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மதீஷா பதிரானா இதுவரை 2 டி20 போட்டிகளில் ஆடி 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். U19 உலகக்கோப்பை தொடரில் கலக்கியதால், இவருக்கு சிஎஸ்கே வாய்ப்பு தரவுள்ளது. அடுத்ததாக வரும் ஆர்சிபி அணிக்கு எதிராக நாளை மோதுகிறது. இந்த போட்டியில் அறிமுகமாகவுள்ளார்.

Recommended Video

IPL 2022: 6th Weekஐ Entertain ஆக்க கூடிய Matches | CSK vs RCB | OneIndia Tamil
அதிருப்தியில் ரசிகர்கள்

அதிருப்தியில் ரசிகர்கள்

இது ஒருபுறம் இருக்க, U 19 உலகக்கோப்பை தொடரில் கலக்கிய இந்திய வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு சிஎஸ்கே வாய்ப்பே தராமல் உள்ளனர். இதற்கு அவர் பயிற்சியில் சரியாக செயல்படவில்லை என விளக்கம் தரப்பட்டாலும், ஒரு சிறந்த வீரரை தோனி புறக்கணிக்கிறார் என ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Story first published: Tuesday, May 3, 2022, 20:59 [IST]
Other articles published on May 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+