
ஏன் வாய்ப்பு இல்லை
பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடக் கூடியவர். இந்திய அணி 2022 அண்டர் 19 உலககோப்பையை வென்றதற்கு ஹங்கர்கேகர் ஒரு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் ஹங்கர்கேகருக்கு பிளேயிங் லெவனில் முதல் போட்டியிலேயே வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 8 போட்டிகள் முடிந்தும், ஹங்கர்கேகருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

கடுமையாக இருக்கும்
இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிளமிங், ஹங்கர்கேகர் திறமையான வீரர் என்பதை நான் அறிவேன். அண்டர் 19 கிரிக்கெட்டில் பல பெரிய ஆட்டங்களை அவர் ஆடியிருக்கிறார். ஆனால், இது அண்டர் 19 கிரிக்கெட்டை விட கடுமையாக இருக்கும். இதனால் , அவரை முதல் போட்டியிலேயே விளையாட விட்டு, அவருடைய நம்பிக்கையை குலைக்க நாங்கள் விரும்பவில்லை. அவரை கவனத்துடன் கையாள வேண்டும்.

வாய்ப்பு கிடைக்கும்
ஹங்கர்கேகருக்கு சில பயிற்சிகளை வழங்கி வருகிறோம். அவர் வேகமாக பந்துவீசுகிறார். ஆனால் அந்த வேகத்தை போட்டியில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவர் கற்று கொள்ள வேண்டும். தேவை ஏற்பட்டால் அவருக்கு இந்த சீசனிலேயே வாய்ப்பு வழங்குவோம் என்று கூறினார். ஃபிளமிங்கின் இந்த பேட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கலாம். ஆனால் அவர் சொல்வது 100 சதவீதம் சரியே.

பஞ்சாப் தவறு
சென்னை மட்டுமல்ல, அண்டர் 19 வீரர்களை ஏலம் எடுத்த எந்த அணியும் இதுவரை வாய்ப்பு வழங்கவில்லை. ராஜ் பவாக்கு மட்டும் பஞ்சாப் ஒரு சில போட்டியில் வாய்ப்பு வழங்கியது. பிறகு, அவரை அணியிலிருந்து நீக்கியது. இது இளம் வீரரான அவரின் நம்பிக்கையை உடைக்கும். அண்டர் 19 கிரிக்கெட்டை விட, இது கடுமையாக இருக்கும் என்பதால், இளம் வீரர்கள் மனதளவில் தயாராக வேண்டும்.

உமுகுந்த் சந்த் கதை
இதே போன்று தான் அண்டர் 19 வீரர் உமுகுந்த் சந்த்க்கு டெல்லி அணி முதல் போட்டியிலேயே வாய்ப்பு வழங்கியது. ஆனால் பிரட்லீ வீசிய முதல் பந்திலேயே கிளின் போல்ட் ஆனார். அவருடைய நம்பிக்கை அங்கேயே அழிந்துவிட்டது. அதன் பிறகு அவருடைய கிரிக்கெட் இறங்குமுகமாக தான் இருந்தது. இந்த அச்சம் காரணமாகவே ஹங்கர்கேகரை பிளேயிங் லெவனில் சிஎஸ்கே சேர்க்கவில்லை.


Click it and Unblock the Notifications











