எங்களுக்கு கொஞ்சம் பிரச்சினை இருக்கு.. சிஎஸ்கே தோல்வி ஏன்..? பயிற்சியாளர் பிளமிங் வேதனை
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்வி குறித்து பயிற்சியாளர் பிளமிங் முதல் முறையாக மௌனத்தை கலைத்துள்ளார்.
Recommended Video
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சீசன் தொடக்கத்தில் சென்னை அணி தொடர்ந்து 4 போட்டியில் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து பேசிய பிளமிங், திருமலை படத்தில் விவேக் ஜோதிடம் பார்க்கும் காட்சியில் உங்களுக்கு பிரச்சினை உள்ள இடம் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு என்று சொல்வார் அல்லவா.

பிரச்சினை
அதே போல் பிளமிங் சிஎஸ்கே அணியின் பிரச்சினை குறித்து பேசிய போது பேட்டிங், பந்துவீச்சு, ஃபில்டிங் என மூன்றிலும் உள்ளதாக தெரிவித்தார். இந்த மூன்று பிரிவிலும் கவனம் செலுத்தி பயிற்சியில் ஈடுபட வேண்டும். இந்த மூன்று பிரிவிலும் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். அனைத்து போட்டியிலும் எங்களுக்கு சில பிரச்சினைகள் உள்ளது,

குறை
நாங்கள் எதிர்பார்க்கும் வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியவில்லை. எங்கள் ஆட்டத்தில் சில இடங்களில் குறை உள்ளது. அதனை போக்க வேண்டும் என்றால் அணியில் உள்ள சில வீரர்கள் தங்களது முழு திறனுடன் விளையாட வேண்டும். இதனால் அணியில் உள்ள வீரர்களை வைத்தே அதனை சரி செய்ய பார்க்கிறோம்.

நம்பிக்கை
நாங்கள் எந்தப் போட்டியிலும் வெல்ல வில்லை என்பதை விட வெற்றியின் அருகில் கூட வரவில்லை என்பது தான் வேதனை. இதனால் எங்களது நம்பிக்கை கொஞ்சம் அசைந்து போய்விட்டது என்று சொல்வது உண்மை, இதனால், மீண்டும் பிளே ஆப் பந்தயத்தில் கலந்து கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

தீபக் சாஹர்
தீபக் சாஹரின் வருகைக்கு தான் எதிர்பார்த்துள்ளோம். ஒன்று அல்லது 2 வீரர்கள் சிறப்பாக விளையாடினால் நாங்கள் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி விடுவோம். எங்களுடைய நம்பிக்கை மீண்டும் கிடைக்கும் ஆனால் இந்த நிலையில் அது நடக்குமா தெரியாது என்று பிளமிங் கூறியுள்ளார். சிஎஸ்கே தனது அடுத்த போட்டியில் ஆர்சிபி உடன் விளையாடுகிறது,


Click it and Unblock the Notifications