Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிராவோவை பங்கமாக கலாய்த்த தோனி.. கிண்டல் செய்யும் சாக்கில் விமர்சனம்.. வீடியோ இதோ

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பிராவோவை பங்கமாக கலாய்த்த வீடியோ, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில தோல்விக்கு பந்துவீச்சு தான் காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கலாய்த்த தோனி

கலாய்த்த தோனி

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் பிராவோ, தோனி, கெய்க்வாட் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டு இருந்தனர். அப்போது ஒரு புகைப்படத்தை காட்டி தொகுப்பாளர் கேள்வி கேட்க, பிராவோவை தோனி பங்கமாக கலாய்த்தார்.

அறிவு வேலை செய்யாது

அறிவு வேலை செய்யாது

பிராவோ எப்போதும் பந்துவீசும் போது, வித்தியாசமாக வீசுவதாக கூறி, ரன்களை விட்டு கொடுப்பார். இதனால் நான் பிராவோவிடம் அப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று கூறுவேன். பிறகு ஓரே ஓவரில் 4 ஓயிட் வீசுவார். அவருடைய மூளை பாதி நேரம் வேலை செய்யவே செய்யாது.

நானே பந்து வீசி விடுவேன்

நானே பந்து வீசி விடுவேன்

ஒரு கட்டத்தில் கடுப்பாகி, நீ விக்கெட் கிப்பிங்கை பார்த்து கொள் நான் உனக்காக பந்துவீசுகிறேன் என்று பிராவோவிடம் எனக்கு சொல்ல தோன்றும். ஏனெனில் பிராவோவை விட மோசமாக நான் பந்துவீச மாட்டேன் என்று சொல்லி சிரித்தார். இதனை கேட்டதும் பிராவோவும் வெட்கப்பட்டு சிரித்தார்.

எல்லை மீறிய விமர்சனம்

எனினும் பிராவோவை கலாய்க்கிறேன் என்ற பெயரில், தோனி நன்றாக விமர்சனம் செய்து விட்டார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், உண்மையில் தோனியும், பிராவோவும் நல்ல நண்பர்கள் என்பதால், இப்படி ஓப்பனாக கிண்டல் செய்து கொண்டனர். தோனி கூறியதையும் பிராவோ பாசிட்டிவாக தான் எடுத்து கொண்டு இருப்பார்.

Story first published: Friday, April 29, 2022, 18:05 [IST]
Other articles published on Apr 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+