
சிஎஸ்கேவின் செயல்
சென்னை அணி கடந்த சில போட்டிகளில் தோற்றதற்கு முக்கிய காரணம் பவுலிங் படை சரியில்லாதது தான். தீபக் சஹார் இல்லாததால், சாய் கிஷோர், முகேஷ் சௌத்ரி, பிரிட்டோரிய்ஸ், ஜோர்டன் என மாற்றி மாற்றி வீரர்களை முயற்சித்தது. ஆனால் அது பெரியளவில் கைக்கொடுக்கவில்லை. ஆனால் இதில் ஏன் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் பங்கேற்கவில்லை என்பது தான் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

மும்பையுடன் போட்டி
U19 உலகக்கோப்பை தொடரில் ஒரு ஆல்ரவுண்டராக தனி கவனத்தை ஈர்த்தவர் ராஜ்வர்தன். மெகா ஏலத்தில் இவரை வாங்க சிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸுடன் கடும் போட்டி போட்டது. இறுதியில் ரூ.1.50 கோடிக்கு வாங்கியது. ஆனால் இதுவரை ஒரு போட்டியில் கூட வாய்ப்பு தராமல் உள்ளது. இதற்கான காரணமும் கூறப்படவில்லை.

திடீர் மாயம்
இந்நிலையில் குஜராத், மும்பை அணிகளுடனான கடந்த 2 போட்டிகளில் சிஎஸ்கேவின் டக் அவுட்டில் ராஜ்வர்தன் காணவில்லை. அவர் எங்கே எனத்தேடிய போது, ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும், ஸ்டாண்டில் சிஎஸ்கே கொடியுடன் ரசிகர்களுடன் ரசிகராக நின்று உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பலருக்கும் ஆதிர்ச்சி ஏற்பட்டது.

கிருஷ்ணப்பா நிலைமை
தீபக் சஹாருக்கு பக்கா மாற்று வீரர் என கருதப்பட்ட வீரர், ரசிகர்களுடன் சேர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார். இதற்காகவா அவரை ரூ.1.50 கோடிக்கு எடுத்தீர்கள். இது கொஞ்சம் கூட நியாயம் இல்லை என சிஎஸ்கே மீது விமர்சனத்தை கொட்டி வருகின்றனர். கடந்த சீசன்களில் கிருஷ்ணப்பா கௌதமும் இதே போல வாய்ப்பு கிடைக்காமல் சிஎஸ்கேவில் இருந்தார். அவர் இந்தாண்டு மிகக்குறைந்த விலையில் ஏலத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











