Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. முழு உடல் தகுதியை பெற்ற வேகப்பந்து வீச்சாளர்.. கலக்கல் தான்

புனே: ஐபிஎல் தொடரில் இன்று முக்கியமான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி, குஜராத்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணியும், 9வது இடத்தில் உள்ள சிஎஸ்கே அணியும் மோதுகிறது. எஞ்சிய போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு என்ற இக்கட்டான நிலைக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியிலிருந்து தீபக் சாஹர் ஏற்கனவே காயம் காரணமாக வெளியேறிய நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.

முழு உடல்தகுதி

முழு உடல்தகுதி

சிஎஸ்கே அணியின் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மிலின் காயம் காரணமாக முதல் போட்டிக்கு பிறகு அணியில் இடம்பெறவில்லை. தற்போது அவர் முழு உடல் தகுதியை பெற்றதால் இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அனுபவம்

சர்வதேச அனுபவம்

இதனால், சிஎஸ்கே அணியின் ரன்களை வாரி வழங்கும் வள்ளலான கிறிஸ் ஜார்டன் நீக்கப்பட்டு, இன்றைய ஆட்டத்தில் மிலினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை பிராவோவை தவிர வேறு எந்த வேகப்பந்துவீச்சாளருக்கும் சர்வதேச அனுபவம் போதிய அளவில் இல்லை.

32 விக்கெட்

32 விக்கெட்

ஆனால் ஆடம் மிலின், 31 சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 32 விக்கெட்டையும், எக்னோமி 7.84 என்ற விதத்திலும் வைத்துள்ளார். ஆடம் மிலின் ஐபிஎல் தொடரிலும் மும்பை அணிக்காக விளையாடி இருக்கிறார். 10 போட்டியில் விளையாடி 7 விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறார்.

ஒரே ஒரு குறை

ஒரே ஒரு குறை

ஆடம் மிலினின் ஒரே ஒரு குறை என்னவென்றால் வேகம் எந்த வகையில் இருக்குமோ, அதே வகையில் ரன்களும் கசியும். இதனை மட்டும் சரி செய்து தனது பலமான யாக்கர் லெந்த் பந்துகளை தொடர்ந்து வீசினால், சிஎஸ்கேவுக்கு ஒரு போலிங்கர் போல் இவரும் கிடைப்பார். ஆனால் யாருமே இல்லாததற்கு இவராவது இருக்கிறாரே என்று ரசிகர்கள் நினைத்து ஆறுதல் அடையலாம். ஆடம் மிலினின் ஒரே ஒரு குறையே வேகம் எந்த வகையில் இருக்குமோ, அதே வகையில் ரன்களும் கசியும். இதனை மட்டும் சரி செய்து தனது பலமான யாக்கர் லெங்த் பந்துகளை தொடர்ந்து வீசினாஙல், சிஎஸ்கேவுக்கு ஒரு போலிங்கர் போல் இவரும் கிடைப்பார். ஆனால் யாருமே இல்லாததற்கு இவராவது இருக்கிறாரே என்று ரசிகர்கள் நினைத்து ஆறுதல் அடையலாம்.

Story first published: Sunday, April 17, 2022, 16:02 [IST]
Other articles published on Apr 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+