சிஎஸ்கேவின் அடுத்த ஆல்பி மார்க்கல் ரெடி.. அப்படி என்ன ஸ்பெஷல்? அதிரடி ஆல்ரவுண்டரை களமிறக்கும் தோனி
சூரத்: வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு புதிய ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க காலங்களில் , அணிக்கு தூணாக விளங்கியவர் தென்னாப்பிரிக்க வீரர் ஆல்பி மார்க்கல்.
தொடக்கத்தில் 3 ஓவர்கள், இறுதியில் அதிரடி பேட்டிங் என ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கினார். அவருக்கு பிறகு சிஎஸ்கேவிற்கு அந்த பொறுப்பை பிராவோ ஏற்று கொண்டார்.

அதிரடி ஆல்ரவுண்டர்
தற்போது பிராவோக்கும் வயதாகி கொண்டே போகிறது. பிராவோவும் முன்பு போல் பேட்டிங்கும் செய்வது இல்லை. சாம் கரணும் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனை கருத்தில் கொண்டு தோனி தேர்வு செய்த வீரர் தான் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் பிரிட்டோரியஸ். 6 அடி உயரம், துல்லியமான பந்துவீச்சு, இறுதியில் அதிரடி ஆட்டம் என ஆல்பி மார்க்கல் கொண்ட அனைத்து தகுதியும் உடையவராக பிரிட்டோரியஸ் திகழ்கிறார்.

74 ரன்கள்
ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே பிரிட்டோரியஸ் எடுத்த அன்றே, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரில் நடுவரிசையில் களமிறங்கிய பிரிட்டோரியஸ் 51 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். இதே போன்று பந்துவீச்சிலும் 4 ஓவர் வீசி 33 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்ததினார்.

பேட்டிங்கில் கவனம்
சமீப காலமாகவேவ பிரிட்டோரியஸ் தனது பேட்டிங்கில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.இதனால் அவரை நடுவரிசையிலேயே களமிறங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார். நல்ல உயரம் என்பதால் பந்தை சிக்சருக்கு விரட்டுவதில் இவருக்கு கஷ்டம் இருக்காது. நல்ல ஃபில்டராகவும், காயம் காரணமாக தனது வேகத்தை தியாகம் செய்துள்ளார் பிரிட்டோரியஸ்.

தோனி சாய்ஸ்
இதனால் பிரிட்டோரியஸ், 130 கிலோ மீட்டர் வேகத்தில் துல்லியமாக பந்துவீசும் நுட்பத்தை வளர்த்து கொண்டார். பிரிட்டோரியஸ் அவுட் ஸ்விங் சிறப்பாக வீசுவார். இதனால் பிரிட்டோரியஸை வெளிநாட்டு பந்துவீச்சாளர் என்ற இடத்தில் தோனி பயன்படுத்த உள்ளார். இதனால் சென்னை அணியின் பலம் மேலும் அதிகரிக்கும். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிரிட்டோரியஸ் இடம்பெறவில்லை. இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் பிரிட்டோரியஸ் சிக்கல் இருக்காது.


Click it and Unblock the Notifications