Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் ஃபேர்வெல் போட்டி.. சிஎஸ்கே தந்த முக்கிய அப்டேட்.. உண்மையை அறிந்த ரசிகர்கள்!! - விவரம்

சூரத்: ஐபிஎல் தொடரில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசனின் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் பயிற்சிகளை தொடங்கிவிட்டன.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே மற்றும் கொலகத்தா அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

தோனிக்கு ஃபேர்வெல்

தோனிக்கு ஃபேர்வெல்

இதற்காக சிஎஸ்கே அணி தயாராகி வரும் இந்த சூழலில் தோனியின் ஃபேரவல் போட்டி குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. 41 வயதை நெருங்கவிருக்கும் தோனி கடந்த சீசனிலேயே எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவார் என்ற தகவல் வெளியானது. ஆனால் சென்னையில் தனது கடைசி போட்டியை விளையாட விரும்புவதாக தெரிவித்திருந்தார். எனினும் இந்தாண்டு மும்பை, புனே நகரங்களில் மட்டுமே போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேட்டிங் ஃபார்ம்

பேட்டிங் ஃபார்ம்

கடந்தாண்டே தோனியின் பேட்டிங் ஃபார்ம் முடிந்துவிட்டது. ஏனென்றால் 16 போட்டிகளில் விளையாடி 114 ரன்களை மட்டுமே அடித்தார். இது அவரின் கிரிக்கெட் வாழ்விலேயே மிக மோசமான ஸ்கோர் ஆகும். இதனால் தோனி இந்தாண்டு தனது ஓய்வை அறிவித்துவிடுவது தான் சிஎஸ்கே அணிக்கு செய்யும் மிகப்பெரிய நல்லது என வல்லுநர்கள் அறிவித்துள்ளனர்.

சிஎஸ்கே தந்த அப்டேட்

சிஎஸ்கே தந்த அப்டேட்

இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் பதிலளித்துள்ளது. ஓய்வு பெறுவது குறித்த இறுதி முடிவை தோனியே எடுப்பார். நாங்கள் எந்தவித அழுத்தமும் தரமாட்டோம். ஏனென்றால் அவர் எங்களுக்கு பல ஆண்டுகளாக விளையாடியுள்ளார். அவர் இதுகுறித்த முடிவை எங்களுக்கு தெரிவித்தவுடன் ரசிகர்களுக்கும் அறிவிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Aanee's Cricket Talks Epi 04 | Rumours We Heard About Cricketers | OneIndia Tamil
சென்னையில் விழா

சென்னையில் விழா

ஏற்கனவே அணியில் தோனியின் மதிப்பு குறைந்துவிட்டது. ஏனென்றால் வீரர்களை தக்கவைக்கும் போது ரவீந்திர ஜடேஜா தான் முதன்மை வீரராக இருந்தார். தோனி பின் தங்கிவிட்டார். இதனால் இந்தாண்டு தனது ஓய்வை அறிவித்துவிட்டு, சென்னையில் ரசிகர்களை சந்திக்க மட்டும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, March 15, 2022, 11:01 [IST]
Other articles published on Mar 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+