கேட்ச் விட்ட சிஎஸ்கே வீரர்.. மைதானத்தில் ஓட விட்ட தோனி.. நம்ம தலக்கு இவ்வளவு கல் நெஞ்சமா?
புனே: ஐபிஎல் தொடரின் சிஎஸ்கேவின் நிலைமை மதில் மேல் உள்ள பூனை போல் மாறிவிட்டது. கொஞ்சம் சறுக்கினாலும் பிளே ஆஃப் வாய்ப்பு அவ்வளவு தான்.
இதனால் சிஎஸ்கே அணி ஒவ்வொரு விசயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பயிற்சி முகாமில் ஒவ்வொரு வீரருக்கும் என்ன குறை இருக்கிறதோ, அதனை நிவர்த்தி செய்ய கூடுதல் பயிற்சி வழங்கப்படுகிறது.
அதே போல் வீரர்களின் பலம் எது என்பதை கண்டறிந்து, அதனை போட்டியின் முக்கியமான நேரத்தில் பயன்படுத்தவும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

அறிவுரை
அந்த வகையில், சிஎஸ்கே பயிற்சியில் இன்று இளம் வீரர் முகேஷ் சௌத்ரி, வசமாக சிக்கினார். பெங்களூருக்கு எதிரான போட்டியின் போது முகேஷ் சௌத்ரி அல்வா போல் வந்த கேட்சை தவறவிட்டார். அப்போதே மைதானத்தில் தோனி அவரிடம் சென்று சில அறிவுரையை வழங்கினார்.

தீவிர பயிற்சி
இந்த நிலையில் தான், முகேஷ் சௌத்ரிக்கு இன்று சிஎஸ்கே ஸ்பெஷல் கேட்சிங் பயிற்சி தந்தது. அதில் முகேஷ் செள்த்ரிக்கு பந்தை உயரத்தில் அடித்து, அதனை அவர் கேட்ச் பிடிக்க பயிற்சி தரப்பட்டது. இதனை மேற்பார்வை செய்த ஃபிளமிங், கேட்ச் பிடிக்கும் போது கையை எப்படி வைத்திருக்க வேண்டும்.

மைதானத்தில் ரவுண்ட்
தலை எப்படி இருக்க வேண்டும் என்பதை எல்லாம் சொல்லி கொடுத்தார். இதனை கவனித்த முகேஷ் சௌத்ரி கேட்சை பிடித்தார். ஆனால் அதோடு நிற்கவில்லை. தொடர்ந்து அவரை மைதானத்தில் ஓட விட்டு கேட்ச் பிடிக்கும் பயிற்சியை தோனி அளித்தார். இதே போன்று முகேஷ் சௌத்ரிக்கு யாக்கர் பந்துவீசுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

ருத்துராஜ் கவனம்
இதே போன்று சிஎஸ்கேவின் தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாடும், சிறப்பு பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார். அதில் அவர் பந்துகளை நன்றாக தான் அடிக்கிறார். ஆனால் போட்டியில் அதை ஏன் கோட்டை விடுகிறார் என்று தெரியவில்லை. சிஎஸ்கே, நாளை ஞாயிற்றுகிழமை குஜராத் அணியை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications