“ஒரே கல்லில் 2 மாங்காய்”.. சிஎஸ்கேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ஐபிஎல் குரூப் முறையில் பிசிசிஐ தாராளம்!
மும்பை: ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ வெளியிட்டுள்ள குரூப் விவரங்களில் சிஎஸ்கேவுக்கு ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்துள்ளது.
15வது சீசன் ஐபிஎல் தொடருக்கான தேதிகள் மற்றும் மைதானங்கள், விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தாண்டு மார்ச் 26ம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

ஐபிஎல் திட்டம்
10 அணிகள் பங்கேற்பதால் இந்த முறை குரூப் சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் தலா 5 அணிகள் என 2 குரூப்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப்பில் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதிக்கொள்ளும். அதன் பின்னர் மற்றொரு குரூப்பில் உள்ள 5 அணிகளில் ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோதும். மற்ற 4 அணிகளுடனும் தலா ஒரே ஒரு முறை மட்டும் மோதிக்கொள்ளும்.

குரூப்கள்
அதன்படி ஏ குரூப்பில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. "பி" குரூப்பில் சிஎஸ்கே, ஐதராபாத், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டான்ஸ் அணிகள் மோதுகின்றன.

சிஎஸ்கேவின் ஆதாயம்
இந்நிலையில் இதில் சிஎஸ்கேவுக்கு பெரும் ஆதாயம் உள்ளது. அதாவது கடந்த சீசன்களில் பலவீனமாகவும், அதிக தோல்விகளை சந்தித்த அணிகளான ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. குஜராத் அணி இந்தாண்டு தான் வந்துள்ளது என்பதால் சரிவர தெரியவில்லை. எனினும் இந்த 4 அணிகளின் தற்போதைய வீரர்கள் பட்டியல் சிஎஸ்கேவுக்கு சவால் விடும் வகையில் இல்லை என்பதே தோனி சாதகமான ஒன்று தன.
Recommended Video

மற்றொரு சுவாரஸ்யம்
மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் சிஎஸ்கே மற்றும் மும்பை வெவ்வேறு குரூப்களில் உள்ளன. எனினும் அட்டவணைப்படி இந்த இரண்டு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதிக்கொள்வது போன்று தான் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை அணியுடனான கணக்கையும் தீர்த்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications