Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கவலைப்படாதீங்க அவர் வராரு..சிஎஸ்கே ரசிகர்களுக்கு பயிற்சியாளர் சொன்ன நற்செய்தி.. ப்ளே ஆஃப் போகலாமா??

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங் நற்செய்தியை கூறியுள்ளார்.

நடப்பு சீசனில் சற்று கம்பேக் கொடுத்திருந்த சென்னை அணிக்கு, மீண்டும் பலத்த அடி விழுந்தது.

பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது.

சிஎஸ்கேவின் நிலைமை

சிஎஸ்கேவின் நிலைமை

இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னணி வீரர் மொயீன் அலி இல்லாததும் முக்கிய காரணம் எனக்கூறலாம். கையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து 2 போட்டிகளாக அவர் பங்குபெறாதது சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரை பாதித்துள்ளது. இனி வரும் போட்டிகளிலும் அவர் பங்கேற்பாரா என்பது சந்தேகத்துடன் தான் உள்ளது.

பயிற்சியாளரின் பதில்

பயிற்சியாளரின் பதில்

இந்நிலையில் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் அதுகுறித்து பேசியுள்ளார். அதில், மொயீன் அலிக்கு பலத்த காயம் என்பது உண்மை தான். எனினும் தற்போது உடல்நிலை தேறியுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு அவர் அணிக்கு திரும்பிவிடுவார் எனத்தெரிவித்துள்ளார். இதே போல அம்பத்தி ராயுடுவின் உடல்நிலை குறித்தும் தெரிவித்துள்ளார்.

அம்பத்தி ராயுவின் நிலை

அம்பத்தி ராயுவின் நிலை

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பத்தி ராயுடுவுக்கு கையில் திடீரென காயம் ஏற்பட்டது. எனினும் தற்போது அவருக்கு எந்த பிரச்சினை இல்லையென்றும், சிறிய ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார். இது சென்னை அணி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளே ஆஃப் வாய்ப்புகள்

ப்ளே ஆஃப் வாய்ப்புகள்

சிஎஸ்கே அணி இதுவரை 8 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் செல்ல முடியும். எனவே சீனியர் வீரர்கள் மீண்டும் தங்களது ஃபார்மை கையில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, April 26, 2022, 19:19 [IST]
Other articles published on Apr 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+