Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏங்க ஒரு நியாயம் வேண்டாமா??.. மோசமான செயலால் பெரும் அடிவாங்கிய சிஎஸ்கே அணி.. ரசிகர்கள் கவலை!

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படு மோசமாக சொதப்பியுள்ளது.

38வது லீக் ஆட்டமான இந்த மோதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி அடுத்தடுத்த அதிர்ஷ்டத்தினால் நல்ல ஸ்கோரை எட்டியது.

சிஎஸ்கே சிறப்பான பவுலிங்

சிஎஸ்கே சிறப்பான பவுலிங்

ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் - ஷிகர் தவான் ஜோடி நிதான தொடக்கத்தை கொடுத்தனர். எனினும் மகீஷ் தீக்‌ஷணாவின் அபார பவுலிங்கால் மயங்க் அகர்வால் 18 ரன்களுக்கு அவுட்டானார். பஞ்சாப் அணியும் 37 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. இதனை தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே சிஎஸ்கேவுக்கு மற்றொரு மகிழ்ச்சி தருணம் கிடைத்தது.

அதிர்ச்சியடைந்த தோனி

அதிர்ச்சியடைந்த தோனி

முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய பனுக்கா ராஜபக்சே, ஜடேஜாவின் பந்துவீச்சில் தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் டீப் ஸ்கொயரில் இருந்த ருதுராஜ் கெயிக்வாட் அழகான கேட்ச்-ஐ தவறவிட்டுவிட்டார். பனுக்காவின் ஸ்கோர் அப்போது 1 ரன் மட்டுமே ஆகும். சரி இதுதான் போகட்டும் என சகஜமாக எடுத்துக்கொண்டால், ஜடேஜாவின் அடுத்த ஓவரிலும் வாய்ப்பு கிடைத்தது.

புகுந்து சென்ற பந்து

புகுந்து சென்ற பந்து

ஜடேஜா வீசிய 9வது ஓவரில் பனுக்கா சிக்ஸருக்கு கிடாசினார். ஆனால் பவுண்டரில் எல்லையில் சாண்ட்னர் நின்றுக்கொண்டிருந்தால், கேட்ச் அழகாக சென்றது. எனினும் அவர் அதனை தவறவிட்டு அதிர்ச்சியளித்தார். அப்போது அவர் 5 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். ஆனால் இந்த இரு கேட்ச்சையும் விட்டது ஆட்டத்தையே மாற்றிவிட்டது.

Recommended Video

PBKS vs CSK: Punjab Kings beat CSK by 11 runs, 6th loss for defending champions | Oneindia Tamil
பெரிய கம்பேக்

பெரிய கம்பேக்

இதன் பிறகு சுதாரித்து ஆடிய பனுக்கா ராஜபக்சே சிஎஸ்கேவின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 37 - 1 என இருந்த ஸ்கோரை ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து 147 - 2 என்ற அளவிற்கு கொண்டு சென்றார். அவர் மட்டும் தனியாக 32 பந்துகளில் 42 ரன்களை சேர்த்தார். இதனால் பஞ்சாப் அணி சூப்பரான கம்பேக் கொடுத்தது. இந்த சீசனில் சிஎஸ்கே கேட்ச்-ஐ தவறவிடுவது இது முதல்முறை அல்ல. தொடர்ந்து ஃபீல்டிங்கில் சொதப்பி வருகிறது.

Story first published: Monday, April 25, 2022, 21:27 [IST]
Other articles published on Apr 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+