Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணியில் கேப்டன்சி பிரச்சினை.. ராயுடு ட்வீ ட் பின்னணி என்ன? தோனியின் அடுத்த நகர்வு

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி ரசிகர்கள் மறக்க வேண்டிய ஒரு ஆண்டு என்றால், அது 2022ஆம் ஆண்டாக தான் இருக்கும்.

களத்திலும் சரி, களத்துக்கு வெளியேவும் சரி, சிஎஸ்கே அணியின் செயல்பாடு ரசிகர்களிடையே அதிர்ச்சியை தந்துள்ளது.

சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது. தொடர்ந்து அணியில் இருக்கும் சீனியர் வீரர்கள் வெளியேற நினைக்க காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

சிஎஸ்கேவில் சிக்கல்

சிஎஸ்கேவில் சிக்கல்

சிஎஸ்கே அணி என்பது இயக்குனர் விக்ரமன் படத்தில் காட்டும் குடும்பம் போல் இருந்தது. ஆனால் தற்போது செக்க சிவந்த வானம் படத்தில் வரும் சகோரர்கள் போல் மாறிவிட்டது. சிஎஸ்கேவில் நடைபெறும் பிரச்சினைகள் அனைத்தும் கேப்டன் பதவி என்ற நாற்காலியை சுற்றியே நடைபெறுகிறது என்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜடேஜா வெளியேற்றம்

ஜடேஜா வெளியேற்றம்

அணியை விட்டு சென்றுவிடுவேன் என்று கூறி, சிஎஸ்கே கேப்டன் பதவிக்கு ஜடேஜா வந்ததாகவும், ஆனால் முழு சுதந்திரம் கிடைக்காமல் தோனியே அனைத்து முடிவுகளிலும் தலையிட்டு ஜடேஜாவை டம்மி பீஸ் ஆக்கி, அவரே பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த கேப்டன்

அடுத்த கேப்டன்

ஜடேஜாவுக்கு பிறகு அடுத்த கேப்டனாக தோனியே வந்தாலும், இளம் வீரர் ஒருவரை கேப்டனாக்கலாம் என்ற முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். இதனால் கடுப்பான அம்பத்தி ராயுடு, சிஎஸ்கே நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால் சிஎஸ்கே நிர்வாகமோ தோனி சொல்வதை தான் கேட்க முடியும் என்று பதில் கூறியுள்ளது.

சமாதானப்படுத்திய சிஎஸ்கே

சமாதானப்படுத்திய சிஎஸ்கே

மேலும் தோனியும், ராயுடுவை அழைத்து பேட்டிங்கில் கவனம் செலுத்துங்கள், மற்றதை பிறகு பார்க்கலாம் என்று கூற கடுப்பான ராயுடு, யாரிடமும் சொல்லாமல் ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிஎஸ்கே நிர்வாகம் ராயுடுவை சமாதானப்படுத்தி வைத்துள்ளது. ராயுடு மீது சிஎஸ்கே நிர்வாகத்துக்கு நல்ல மதிப்பு உள்ளது. தங்களது ஜூனியர் அணிக்கு ராயுடுவை தான் பயிற்சியாளராக சிஎஸ்கே வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 14, 2022, 22:16 [IST]
Other articles published on May 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+