For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே வில் ஒரு RRR..!! ஜடேஜா, ராயுடு படைக்க போகும் சாதனை.. ருத்துராஜ் 4வது போட்டியின் வரலாறு

மும்பை: ஐபிஎல் தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் இன்று வெற்றியே பெறாத சிஎஸ்கேவும், ஐதராபாத் அணிகளும் மோத உள்ளன.

இந்தப் போட்டிக்கான வெற்றி வியூகத்தை இரு அணிகளும் அமைத்துள்ள நிலையில், சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா மற்றும் ராயுடு இன்று சாதனை படைக்க உள்ளனர்.

மேலும் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 3 போட்டியிலும் சொதப்பிய ருத்துராஜ் கெய்க்வாட், கடந்த காலத்தில் 4வது போட்டியில் எவ்வளவு ரன் அடித்துள்ளார் என்பதையும் பார்க்க உள்ளோம்.

ஜடேஜா 150

ஜடேஜா 150

சிஎஸ்கே அணியில் சாதாரண வீரராக உள்ளே நுழைந்து தற்போது தோனிக்கு அடுத்த இடத்தில் கேப்டனாக முன்னேறியுள்ளார் ஜடேஜா. இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா இன்று 150வது போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்த பெருமைக்குரிய போட்டியில் அணிக்காக ஜடேஜா பேட் மற்றும் பந்துவீச்சில் வெற்றியை தேடி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயுடு மைல்கல்

ராயுடு மைல்கல்

இதே போன்று சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் அம்பத்தி ராயுடு, இன்றைய ஆட்டத்தில் 29 ரன்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். தற்போது அவர் 3971 ரன்கள் அடித்துள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிராக ராயுடு 16 இன்னிங்சில் 513 ரன்களை விளாசியுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 132 ஆக உள்ளது.

ருத்துராஜ் வரலாறு

ருத்துராஜ் வரலாறு

இந்த நிலையில் சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ருத்துராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் ஃபார்ம் தான். இந்த சீசனில் 0, 1,1, என மட்டுமே ஸ்கோர் அடித்துள்ளார். இதே மாதிரி தான் கடந்த சீசன்களிலும் முதல் 3 போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த வகையில் பார்த்தால், கடந்த 2 சீசன்களிலும் ருத்துராஜ் தனது 4வது போட்டியில் அரைசதம் அடித்துள்ளார்.

சமாளிக்குமா சிஎஸ்கே

சமாளிக்குமா சிஎஸ்கே

இதனால் இன்றைய ஆட்டத்திலும் ருத்துராஜ் அரைசதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புவனேஸ்வர் குமார், எம்ரான் மாலிக், நடராஜன், வாசிங்டன் சுந்தர் ஆகியோர் பந்துவீச்சை சிஎஸ்கே வீரர்கள் சமாளித்து 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனென்றால் பந்துவீச்சு குறையாக இருக்கும் போது, பேட்டிங் தான் சிஎஸ்கேவை காப்பாற்ற முடியும்.

Story first published: Saturday, April 9, 2022, 16:50 [IST]
Other articles published on Apr 9, 2022
English summary
IPL 2022 – CSK Jadeja and Rayudu nearing a milestone today vs srh சிஎஸ்கே வில் ஒரு RRR..!! ஜடேஜா, ராயுடு படைக்க போகும் சாதனை.. ருத்துராஜ் 4வது போட்டியின் வரலாறு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+