Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவில் ஒரு வார்னே.. அச்சு அசலாக வார்னே போல் பந்துவீசும் பிரசாந்த்..தோனி எடுத்த மாஸ்டர் ஸ்டோர்க்

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வார்னே போல் பந்துவீசும் வீரர் ஒருவர் உள்ளதாக தகவல வெளியாகியுள்ளது.

Recommended Video

IPL 2022: CSK Leg Spinner Prashant solanki bowling like warne in Nets | OneIndia Tamil

ஐபிஎல் மெகா ஏலத்தின் போது மும்பையை சேர்ந்த 22 வயதான பிரசாந்த் சோலங்கியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.

பெயரே தெரியாத வீரருக்கு ஒரு கோடியா என்று ரசிகர்களும் விமர்சனம் செய்தனர். ஆனால் அது தோனியின் மாஸ்டர் ஸ்டோர்க் இன்று இப்போது தான் தெரியவந்துள்ளது.

லெக் ஸ்பின்னர்

லெக் ஸ்பின்னர்

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி என அனைத்து வகை போட்டியிலும் லெக் ஸ்பின் மூலம் விரைவாக விக்கெட் வீழ்த்த முடியும். லெக் ஸ்பின் பந்தை அடிக்க முற்பட்டு வீரர்கள் கேட்ச் இல்லை போல்ட் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் அனைத்து அணிகளுமே லெக் ஸ்பின்னர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள்.

பிரசாந்த் சோலங்கி

பிரசாந்த் சோலங்கி

சிஎஸ்கே வில் கூட இம்ரான் தாஹிர் வயதான பிறகும் முக்கிய வீரராக வலம் வந்தார். தற்போது கிங் ஆஃப் ஸ்பின் என்று அழைக்க கூடிய வார்னே போல் பந்துவீசும் பிரசாந்த் சோலங்கியை சிஎஸ்கே தட்டி தூக்கியுள்ளது. பிரசாந்த் சோலங்கியின் ரோல் டாடலே வார்னே தானாம். வார்னேவை பார்த்து தான் சுழற்பந்துவீசவே முடிவு எடுத்ததாக பிரசாந்த் சோலங்கி கூறி இருக்கிறார்.

5 விக்கெட்

5 விக்கெட்

பிரசாந்த் சோலங்கி கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் தனது அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். இதே போன்று பரோடா அணிக்கு எதிரான சையது முஸ்தாக் அலி தொடரில் பிரசாந்த் சோலங்கி 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சிஎஸ்கேவின் நெட் பவுலராக பணியாற்றிய பிரசாந்த்க்கு, இப்போது அணியிலேயே வாய்ப்பு கிடைத்துவிட்டது.

அசத்தல் பந்துவீச்சு

அசத்தல் பந்துவீச்சு

தற்போது சிஎஸ்கே பயிற்சி முகாமிலும் பிரசாந்த் சோலங்கி அசத்தி வருகிறார். தோனியை கூட தனது பந்துவீச்சு மூலம் பயிற்சி ஆட்டத்தில் அவுட்டாக்கியுள்ளார் பிரசாந்த் சோலங்கி. இதனால் பிரசாந்த் சோலங்கியை பிளேயிங் லெவனில் சேர்க்க தோனி முனைப்பு காட்டி வருகிறார் ஏற்கனவே ஜடேஜா, மொயின் அலி அணியில் உள்ள நிலையில், பிரசாந்த் சோலங்கியும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றால் அசத்தல் தான்.

Story first published: Wednesday, March 23, 2022, 22:30 [IST]
Other articles published on Mar 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+