Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவுக்கு திரும்பும் 3 பழைய வீரர்கள்.. மெகா ஏலத்திற்காக பலே திட்டம்.. காரணம் என்னென்ன தெரியுமா?

சென்னை: ஐபிஎல் மெகா ஏலத்தின் போது சிஎஸ்கே தனது முன்னாள் வீரர்கள் பலரை மீண்டும் அணிக்குள் எடுக்க திட்டமிட்டு வருகிறது.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் ஜனவரி மாதம் 2வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக அனைத்து அணிகளும், தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

சிஎஸ்கே முடிவு

சிஎஸ்கே முடிவு

அந்தவகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதன்மை தேர்வாக ரவீந்திர ஜடேஜாவும் அவருக்கு அடுத்தபடியாக எம்.எஸ்.தோனி தக்கவைக்கப்பட்டார். 3வது மற்றும் 4வது தேர்வாக ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் மொயீன் அலி ஆகியோர் அணிக்குள் தக்கவைக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த அணியில் இருந்து வெளியேறிய பழைய வீரர்கள் மீண்டும் அணிக்குள் வரலாம் எனத் தெரிகிறது.

 முதன்மை தேர்வு

முதன்மை தேர்வு

இந்த பட்டியலில் முதன்மை தேர்வாக தமிழக வீரர் விஜய் சங்கர் உள்ளார். விஜய் சங்கர் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக கடந்த 2014ம் ஆண்டு ஓப்பந்தமானார். ஆனால் அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடி பவுலிங்கில் மட்டும் 19 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதன்பின்னர் வெளியேற்றப்பட்ட அவர், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். இந்நிலையில் தற்போது சையது முஷ்டக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடியுள்ளதால் அவருக்கு சிஎஸ்கே நிச்சயம் குறிவைக்கலாம்.

 சீனியர் ஸ்பின்னர்

சீனியர் ஸ்பின்னர்

அடுத்ததாக மற்றொரு தமிழக வீரர் ரவி அஸ்வினை சிஎஸ்கே ஏலம் எடுக்கலாம். இவர் 2009 முதல் 2015 வரை 97 போட்டிகளில் சிஎஸ்கேவுகாக விளையாடியுள்ளார். அதில் 90 விக்கெட்களையும் கைப்பற்றினார். சமீபத்தில் இந்திய டி20 அணியில் இணைந்த அவர் விக்கெட் மழை பொழிந்து வருகிறார். இதனால் அவரை மடக்க சிஎஸ்கே முயலும்.

பிரவோவின் இடம்

பிரவோவின் இடம்

டுவைன் பிராவோவின் இடத்திற்கு ஜேசன் ஹோல்டரை குறிவைத்துள்ளது சிஎஸ்கே. தற்போது ஐதராபாத் அணியின் மிக முக்கிய ஆல்ரவுண்டராக இருக்கும் ஹோல்டர் 2021ம் ஆண்டு ஐபிஎல்-ல் 8 போட்டிகளில் 16 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கிலும் நல்ல அதிரடியை காட்டுவார் என்பதால் பிராவோவின் இடத்திற்கு நிச்சயம் சிஎஸ்கே முயலும்.

Story first published: Monday, December 13, 2021, 18:27 [IST]
Other articles published on Dec 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+