ஐபிஎல் – பந்துகளை பறக்கவிட்ட பஞ்சாப் – தடுத்து நிறுத்திய சிஎஸ்கே.. ஜடேஜா படை அசத்தல்
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியது.
சிஎஸ்கே அணியில் துஷ்பாண்டேவுக்கு பதில் கிறிஸ் ஜோர்டன் களமிறங்கினார். இதனையடுத்து முதல் ஓவரை இந்திய வீரர் முகேஷ் சௌத்ரி வீசினார்.

தோனி சம்பவம்
முதல் பந்தே பவுண்டரி செல்ல, அடுத்த பந்திலேயே மாயங் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் நடப்பு சீசனில் சிஎஸ்கே பவர்பிளேவில் முதல் விக்கெட்டை வீழ்த்தியது. இதனையடுத்து , 2வது ஓவரை இங்கிலாந்து வீரர் ஜார்டன் வீசினார் முதல் பந்தே சிக்சருக்கு சென்றது இதன் அடுத்த பந்தே தோனி ஒரு ரன்அவுட் சம்பவத்தை செய்தார்.

லிவிங்ஸ்டோன் அதிரடி
பஞ்சாப் அணி 14 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். சௌத்ரி வீசிய ஒரு ஓவரில் 6,0,4,4,4,6 என 24 ரன்களை லிவிங்ஸ்டோன் விளாசினார். இதன் பின்னர் பிராவோ வீசிய ஓவரிலும் தவான் 16 ரன்களை பறக்கவிட்டார்.

கோட்டைவிட்ட ராயுடு
இதனால் பஞ்சாப் அணி பவர்பிளேவில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்தது. 7வது ஓவரை கேப்டன் ஜடேஜா வீச அவரது பந்தையும் லிவிங்ஸ்டோன் சிக்சருக்கு பறக்கவிட்டார். லிவிங்ஸ்டோனுக்கு 45 ரன்களில் ராயுடு மூலம் ஒரு லைஃப் கிடைத்தது. 5 சிக்சர், 5 பவுண்டரி என லிவிங்ஸ்டோன் 32 பந்தில் 60 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே அசத்தல்
அறிமுக போட்டியில் களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா 3 சிக்சர்களை பறக்கவிட்டு 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாரூக்கான் 6 ரன்களிலும், ஓடியன் ஸ்மித் 3 ரன்களிலும் , ராகுல் சாஹர் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே கடைசி 6 ஓவரில் 38 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது. ஜார்டன், பிரிட்டோரியஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications