
பேட்டிங் சொதப்பல்
அதிரடியாக ஆட முற்பட்ட உத்தப்பா 15 ரன்களிலும், கெய்க்வாட் 16 ரன்களில் ஆட்டமிழக்க, அம்பத்தி ராயுடு 27 ரன்களில் வெளியேறினார். மொயின் அலி மட்டும் அதிரடியாக ஆடி 48 ரன்கள் சேர்க்க தோனி, சிவம் துபே 3 ரன்களில் வெளியேற, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

அபிஷேக் அதிரடி
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில் வில்லியம்சன், அபிஷேக் சர்மா ஜோடி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பவர்பிளேவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுக்க, அதன் பிறகு அபிஷேக் சர்மா அதிரடியை காட்டினார். வில்லியம்சன் 32 பந்துகளில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய இளம் வீரர் அபிஷேக் சர்மா 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

வெளுத்து கட்டிய திரிபாதி
திரிபாதி தன் பங்கிற்கு 15 பந்துகளில் 39 ரன்கள் குவிக்க, அபிஷேக் சர்மா 75 ரன்களில் வெளியேறினார். இதனால் ஐதராபாத் அணி 17.4வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி தொடர்ந்து 4 போட்டியில் தோல்வியை தழுவியது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி 4 போட்டியில் தொடர்ந்து தோல்வி அடைவது இது 2வது முறையாகும். பிளேயிங் லெவனில் சிஎஸ்கே அணி நிர்வாகம் செய்த குளறுபடியே தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

மெகா தவறு
சிஎஸ்கே அணியில் சரியான இந்திய வேகப்பந்துவீச்சாளர் இல்லை. இதனால் இந்திய வீரர் சௌத்ரியை நீக்கிவிட்டு, இந்திய சுழற்பந்துவீச்சாளரான பிரசாந்த் சோலங்கியை சிஎஸ்கே சேர்த்து இருக்கலாம். ஆனால், கடந்த 2 போட்டியில் நன்றாக பந்துவீசிய பிரிட்டோரியஸை நீக்கிவிட்டு, தீக்சனாவை சேர்த்தது எல்லாம் எந்த வகையில் நியாயம் என்று தோனியும், ஜடேஜாவும் தான் சொல்ல வேண்டும்.

ஹங்கர்கேகர் ஏன் இல்லை
நடுவரிசையில் சிவம் துபே முதல் 3 போட்டியில் சிறப்பாக ஆடினாலும், அது அவருக்கு ஏற்ற இடம் கிடையாது. அவரால் சரியாக 4 ஓவர் பந்துவீச முடியவில்லை என்றால் அவர் அணிக்கு தேவையே இல்லை. அதற்கு பதில் ஹங்கர்கேகரை சேர்த்து பேட்டிங்கையும், பந்துவீச்சையும் சிஎஸ்கே பலப்படுத்தி இருக்கலாம். ஆனால் என்ன காரணமோ, இதுவரை அவரை பயன்படுத்தாமல் சிஎஸ்கே பாதுகாத்துவருகிறது.
Recommended Video

பேட்டிங் வரிசை மாற்றம்
ருத்துராஜ்க்கு ஓய்வு வழங்கிவிட்டு, அம்பத்தி ராயுடுவை தொடக்க வீரராக களமிறக்கி வேண்டும். அதையும் செய்யவில்லை. இனிவரும் 10 போட்டியில் சிஎஸ்கே 8 போட்டியில் வென்றால் தான் பிளே ஆப் சுற்று. அதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், 2020ஆம் ஆண்டு போல் சிஎஸ்கே தொடரை விட்டு வெளியேறவே வாய்ப்பு அதிகம் உள்ளது.


Click it and Unblock the Notifications











