DRS எடுக்க முடியாதது ஏன்..?? சிஎஸ்கேவுக்கு நடந்த அநியாயம்.. 2 முக்கிய வீரர்கள் பரிதாபமாக அவுட்!
மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்கு தொடக்கமே துரோகம் நடந்துள்ளது.
Recommended Video
இரு அணிகளும் மோதி வரும் 59வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஓப்பனிங்கே அதிர்ச்சி
இதனையடுத்து சென்னை அணியில் இருந்து டெவோன் கான்வே - ருதுராஜ் கெயிக்வாட் ஜோடி ஓப்பனிங் களமிறங்கினர். முதல் ஓவரை டேனியல் சாம்ஸ் வீச, ருதுராஜ் கெயிக்வாட் முதல் பந்தை சிங்கிள் அடித்துவிட்டு ஓடினார். ஸ்ட்ரைக்கிற்கு வந்த டெவோன் கான்வே முதல் பந்திலேயே டக் அவுட்டானது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

கான்வே விக்கெட்
டேனியல் சாம்ஸ் வீசிய பந்தை தடுப்பாட்டம் ஆட முயன்றபோது பந்து கால் பேடில் பட்டது. இதற்கு களத்தில் இருந்த நடுவரும் எல்.பி.டபள்யூ அவுட் கொடுத்தார். ஃபுல் லெந்த் டெலிவரியாக வந்த அந்த பந்து, ஸ்டம்ப் லைன் மிஸ்ஸிங் ஆக தான் சென்றது. இதனை அறிந்த கான்வே DRS மூலம் 3வது நடுவருக்கு செல்ல கோரினார். ஆனால் அதற்கு அனுமதிக்கப்படவில்லை.

என்ன காரணம்
இந்த போட்டியில் DRS முறை சில மணி நேரங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்தில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஜெணரேட்டர்கள் மூலம் மின் விளக்குகள் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணத்தால் தொழில்நுட்ப கருவிகள் அனைத்தையும் பயன்படுத்த முடியாமல் போயுள்ளது.
நாட் அவுட் என தெரிந்தும், அதனை ரிவ்யூவ் கேட்க முயன்றும், டெவோன் கான்வேவால் கேட்க முடியாமல் போனது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது.

அடுத்தடுத்து அதிர்ச்சி
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சிஎஸ்கேவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி வந்தது. அதே ஓவரின் 4வது பந்தில் மொயீன் அலியும் டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் 2வது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் ராபின் உத்தப்பாவும் 1 ரன்னுக்கு எல்.பி.டபள்யூ அவுட்டானார். அவர் 3வது நடுவருக்கு செல்ல முயன்றும் அது நடக்கவில்லை. இதனால் சிஎஸ்கே அணி 5 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து பரிதாப நிலைக்கு சென்றது.


Click it and Unblock the Notifications