கடைசி ஓவரில் பரபரப்பு.. முதல் பந்தே தோனி சிக்ஸர்.. ஒருநொடியில் மாறிய சிஎஸ்கே வெற்றி.. எப்படி தோற்றது
மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அதிர்ஷ்டம் அதிகம் என்றே கூறலாம். அனைத்து கேட்ச்களும் மிஸ் ஆனதால் நல்ல ஸ்கோரை அடித்தது.

பஞ்சாப் அணி பேட்டிங்
ஓப்பனிங் வீரர் மயங்க் அகர்வால் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 37 ரன்களுக்கெல்லாம் ஒரு விக்கெட் போனது. இதன் பின்னர் வந்த பனுகா ராஜபக்சே 2 முறை கேட்ச் கொடுத்தும் சிஎஸ்கே தவறவிட்டது. இதன் விளைவாக பனுகா - ஷிகர் தவான் ஜோடி 37 - 1 என இருந்த ஸ்கோரை 147 - 2 என உயர்த்தி சென்றனர்.

கடினமான இலக்கு
சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் 59 பந்துகளில் 9 பவுண்டர்கள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 88 ரன்களை அடித்தார். பனுகா ராஜபக்ச 32 பந்துகளில் 42 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் வந்த லிவிங்ஸ்டன் சிறிது அதிரடி காட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்களை சேர்த்தது.

சென்னை இன்னிங்ஸ்
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில் இந்த முறையும் பேட்டிங் சொதப்பல் தான். ஓப்பனிங் வீரர் ராபின் உத்தப்பா 1 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் வந்த மிட்செல் சாண்ட்னர் (9), ஷிவம் தூபே (8) என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெயிக்வாட் 30 ரன்களை அடித்து ஏமாற்றினார்.

கடைசி ஓவர்
89 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்த சிஎஸ்கே அணியை அம்பத்தி ராயுடு தான் தூக்கி நிறுத்தினார். 39 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 78 ரன்களை விளாசினார். இதனால் கடைசி 12 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்டது.
Recommended Video

தோனி அதிரடி
தோனி வந்து காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே அவரும் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். ஆனால் அடுத்த பந்திலேயே அவுட்டாகி ஏமாற்றினார். ரன் அதிகம் தேவை என்பதால் அப்போது வந்த தோனியால் கூட எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் 20 ஓவர்களில் 176 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.


Click it and Unblock the Notifications