For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஓவரில் மாறிய வெற்றி.. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கேவுக்கு மோசமான சாதனை.. 210 ரன்கள் அடித்தும் தோல்வி

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் தொடரில் சிஎஸ்கே அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணியுடன் மோதியது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசியது.

இந்த சீசனில் 6 போட்டிகளில் 5 போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்த அணி தான் வென்றது. இதனால் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் சிஎஸ்கே அணி களமிறங்கியது.

இதனால் சென்னை அணியில் மொயின் அலி, பிரிட்டோரியஸ் மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகியோர் ஆகியோர் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்பட்டார்கள்.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

இதே போன்று தொடக்க வீரராக முதல் ஆட்டத்தில் களமிறங்கிய கான்வே நீக்கப்பட்டார். ராபின் உத்தப்பா தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் ஆனார். இதன் பின்னர் உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்த மொயின் அலி, அதிரடி காட்டினார். சிஎஸ்கே பவர்பிளேவில் 73 ரன்கள் அடித்து, நடப்பு சீசனில் அதிகபட்ச ஸ்கோரை நிர்ணயித்தது

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

சிறப்பாக விளையாடிய உத்தப்பா 50 ரன்களில் ரவி பிஸ்னாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய மொயின் அலி 35 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதே போன்று ராயுடுவும் 20 பந்துகளில் 27 ரன்கள் அடித்தார். சிறப்பாக விளையாடிய துபே 49 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் ஜடேஜா 9 பந்துகளில் 17 ரன்கள் அடிக்க, தோனி முதல் பந்திலேயே சிக்சர் விளாசி அசத்தினார். 6 பந்துகளில் 16 ரன்கள் தோனி அடிக்க , டி20 போட்டியில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார். 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.

99 ரன்கள்

99 ரன்கள்

இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல், குயின்டன் டி காக் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் சிதறடித்தனர். கேஎல் ராகுல் 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். குயின்டன் டிக்காக் 61 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.

Recommended Video

LSG vs CSK : Badoni, Lewis help LSG seal maiden IPL win with victory over CSK | Oneindia Tamil
மாறிய ஆட்டம்

மாறிய ஆட்டம்

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 99 ரன்கள் சேர்த்தது. மணிஷ் பாண்டே 5 ரன்களில் வெளியேற, தீபக் ஹூடா 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் சிஎஸ்கேவின் வெற்றி கதவு திறந்தது. கடைசி 2 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரை சிவம் துபே வீசினார். இதில் லிவிஸ் மற்றும் பதோனி பந்துகளை பறக்கவிட்டு 25 ரன்கள் சேர்த்தனர். இதனால் ஆட்டமே தலைக்கீழ் மாறியது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் லக்னோ 3 பந்துகள் எஞ்சிய நிலையில் வென்றது. இதன் மூலம் ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் சென்னை அணி முதல் முறையாக 2 போட்டியில் தோல்வியை தழுவியது.

Story first published: Friday, April 1, 2022, 0:12 [IST]
Other articles published on Apr 1, 2022
English summary
IPL 2022 – CSK lost 2 in a row in season opener for the very first timeசிஎஸ்கே ஃபில்டிங் சொதப்பல்.. 2 கேட்ச்களை விட்டதால் கடுப்பான தோனி.. ஆட்டத்தில் பின்னடைவு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+