வாசிம் அக்ரம் போல் பந்துவீசும் சிஎஸ்கே வீரர்.. பிளேயிங் லெவனில் வாய்ப்பு.. மூன்று அதிரடி மாற்றம்
மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் 7வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் , முதல் வெற்றிக்காக சிஎஸ்கேவும், லக்னோவும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும்.
இன்றைய போட்டியில் ஜாம்பவான் தோனியும், இளம் சிங்கம் பதோனியும் எப்படி விளையாட போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

பந்துவீச்சு
பார்போர்ன் மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது. நடப்பு சீசனில் நடைபெற்ற 6 போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே 5 முறை வென்றுள்ளது. மேலும் பனிப்பொழிவும் இருப்பதால், டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீசுவதாக அறிவித்தார்.

அதிரடி மாற்றம்
லக்னோ அணியில் பிளேயிங் லெவனில் ஆண்டிரு டை இடம்பெற்றுள்ளார். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கான்வே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மொயின் அலியும், ஆடம் மிலின் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளர்
இதே போன்று சிஎஸ்கே அணியில் முக்கேஷ் சௌத்ரி என்ற இடதுகை வேகப்பந்துவீச்சாளர் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார். இதுவரை 12 டி20 போட்டியில் விளையாடியுள்ள முகேஷ் சௌத்ரி, 16 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். நீண்ட காலத்துக்கு பிறகு சிஎஸ்கே அணியில் ஒரு இந்திய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இடம்பெற்றுள்ளார்.
Recommended Video

பிளேயிங் லெவன்
டாஸை இழந்தாலும் ரன் குவிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கேப்டன் ஜடேஜா தெரிவித்துள்ளார். நமது இணையத்தளத்தில் ஏற்கனவே சொன்னது போல் இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக உத்தப்பா களமிறங்குகிறார். சிஎஸ்கே பிளேயிங் லெவன் ருத்துராஜ், உத்தப்பா, மொயின் அலி, ராயுடு, தோனி, ஜடேஜா, பிராவோ, சிவம் துபே, பிரிட்டோரியஸ், துஷ்பாண்டே,முகேஷ் சௌத்ரி


Click it and Unblock the Notifications