இங்கிலாந்து வீரரை களமிறக்கிய சிஎஸ்கே.. 2 அறிமுக வீரருக்கு பஞ்சாப் வாய்ப்பு.. ஜடேஜாக்கு அடித்த லக்
மும்பை: ஐபிஎல் 15வது சீசனின் 11வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், சிஎஸ்கே அணியும் மோதுகின்றன. பஞ்சாப் விளையாடிய 2 போட்டியில் ஒன்றில் தோல்வியை தழுவியது.
சிஎஸ்கே விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதனால் இரு அணிகளுமே வெற்றி பாதைக்கு திரும்ப போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை விளையாடிய 2 போட்டியிலும் டாஸை இழந்து, எதிர் அணிகளால் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது.

டாஸ்
இந்த நிலையில் மும்பை பார்போர்ன் மைதானமும் சேஸ் செய்யும் அணிக்கே சாதகமாக இருக்கும். இதனால் ஜடேஜா தனது குல தெய்வத்தை கும்பிட்டவாறு டாஸ் போட, இறுதியில் ஜடேஜாவுக்கு சாதகமாக டாஸ் விழுந்தது. இதனையடுத்து கலகலவென சிரித்த ஜடேஜா, பந்துவீசுவதாக அறிவித்தார்.

கிறிஸ் ஜார்டன்
நெருக்கடியில் இருந்தாலும் ஆட்டத்தை சிம்பிளாக ஆட உள்ளோம். அழுத்தம்ன தருணத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று சிஎஸ்கே வீரர்களுக்கு நன்கு தெரியும் என்று கூறிய ஜடேஜா, இன்றைய ஆட்டத்தில் துஷ்பாண்டேவுக்கு பதில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜார்டனை சேர்த்து உள்ளதாக கூறினார்.

கிண்டல்
ஜார்டன் நல்ல வேகத்தில் பந்துவீசவும், யாக்கர் பந்தை வீசுவதிலும் வல்லவர். ஆனால் அவருடைய பந்துவீச்சில் ரன்கள் அதிகமாக போகும். ஜார்டனை ஏலத்தில் எடுத்த போதே கேலி கிண்டலுக்கு சிஎஸ்கே உள்ளானது. அதனால் இன்று எப்படி அவர் பந்துவீசுவார் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

2 மாற்றம்
இதே போன்று பஞ்சாப் அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் வைபவ் ஆரோரா மற்றும் ஜித்தேஷ் சர்மா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரன் குவித்து நெருக்கடி தருவோம் என்று மாயங் அகர்வால் கூறினார்.


Click it and Unblock the Notifications