Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு சிஎஸ்கே கொடுத்த சர்பரைஸ்.. கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டம்.. என்ன விசயம்?

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அணி நிர்வாகம் இன்று ஸ்விட் சர்பரைஸ் ஒன்றை தந்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் தொடங்குவதற்கு முன் தோனி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்றார்.

இதனையடுத்து முதல் முறையாக சீசன் தொடக்கத்தில் சிஎஸ்கே அணி தொடர்ந்து 2 போட்டியில் தோல்வியை தழுவியது.

மோசமான தொடக்கம்

மோசமான தொடக்கம்

அதுவும் 2வது போட்டியில் 210 ரன்கள் அடித்தும் மோசமான பந்துவீச்சு காரணமாக சிஎஸ்கே தோல்வியை தழுவியது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்களும், சரி வீரர்களும் சரி ஏமாற்றத்துடன் உள்ளனர். சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக விளையாடவில்லை.

சிஎஸ்கே சர்ப்ரைஸ்

சிஎஸ்கே சர்ப்ரைஸ்

ஐபிஎல் நெடுந்தொடர் என்பதால், நிலைமை எப்போது வேண்டுமாலும் தலைக்கீழ் மாறும். இதனால் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சிஎஸ்கே இன்று ஒரு நல்ல விசயத்தை செய்துள்ளது. அதாவது, தோனி தலைமையிலான இந்திய அணி உலககோப்பை வென்று இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

இதனையடுத்து இந்த வரலாற்று சம்பவத்தை கொண்டாடும் விதமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் பயிற்சி முடித்து வந்த வீரர்களுக்கு சின்ன சர்பரைஸ் தந்தது. தோனிக்கு 2 பெரிய கேக்களை வாங்கி கொடுத்து சிஎஸ்கே அணி இந்த நாளை கொண்டாடியது. தோனியும் இதனை ஏற்று கொண்டு உற்சாகமாக கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நாளைய போட்டி

நாளைய போட்டி

சிஎஸ்கே அணி தனது 3வது டி20 போட்டியை நாளை ஞாயிற்றுகிழமை பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. பஞ்சாப் அணி கொல்கத்தாவுடன் வீழ்ந்துள்ள நிலையில், தற்போது சிஎஸ்கேவுடன் மோதுகிறது. தொடர்ந்து 2 போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், வெற்றி பெறும் முனைப்புடன் சிஎஸ்கே உள்ளது. தொய்வாக இருந்த சிஎஸ்கே வீரர்களுக்கு இந்த சர்ப்ரைஸ் நல்ல உற்சாகமாக அமைந்துள்ளது.

Story first published: Saturday, April 2, 2022, 21:08 [IST]
Other articles published on Apr 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+